தி.மு.கவுடன் ம.தி.மு.கவை இணைக்கப்போவதில்லை என்று மதிமுக தலைமை கழகச் செயலாளர் துரை வைக்கோ தெரிவித்துள்ளார்.
மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி வைக்கோவுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். இதில் கடந்த 30 ஆண்டிகளில் வைக்கோவின் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்வர்கள் இனிமேல் இழக்காமல் இருக்க மதிமுகவை, அதன் தாய் கழமான திமுகவுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் இதற்கு மதிமுக தலைமை கழகச் செயலாளர் துரை முருகன் பதிலளித்துள்ளார். ம.தி.மு.க, தி.மு.கவுடன் இணையப்போவதில்லை என்றும், மதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த துரைசாமி இப்படி கூறியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் “ 2021ம் தேர்தலை, திமுக சின்னத்தில் போட்டியிட்டபோது, அதற்கு மறுப்பு தெரிவித்த துரைசாமி, தற்போது திமுகவுடன் இணைய வேண்டும்” என்று கூறுகிறார்.
”கடந்த 30 ஆண்டுகளில், மதிமுக தனித்துவமான போக்கை நிரூபித்துள்ளது. இது எதிர்காலத்திலும் நீடிக்கும் என்று கூறிய அவர், உள்நோக்கத்துடன் துரைசாமி செயல்படுகிறார்” என்று கூறியுள்ளார்.
” தொழில்சங்க போராளியாக இருந்த துரைசாமி, ம.தி.மு.கவின் தொழில்சங்கத்தை தனது தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தியுள்ளார். மேலும் கட்சியை தனது பாதுகாப்பிற்கு பயன்படுத்தி உள்ளார். 2021ம் தேர்தலின்போதே அவர் கட்சிக்கு எதிராக செயல்பட்டார். ஆனால் தலைவர் வைக்கோ அவரின் அனுபவத்திற்காகவும், வயதிற்காகவும், அவர் செய்ததை பெரிதாக்கவில்லை. ” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“