உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீ ராமர் ஆலயம் கட்டப்பட்டு உள்ளது. இந்த ஆலயத்தில் ஜனவரி 22ஆம் தேதி குர்ஆன் பிரதிஷ்ட்டா நடைபெறுகிறது.
இந்நிகழ்வில் பங்கேற்குமாறு முக்கிய பிரமுகர் பலருக்கும் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மனைவி, துர்கா ஸ்டாலினுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
இந்த அழைப்பிதழை விஷ்வ ஹிந்து பரிஷத் அகில இந்திய இணைச் செயலாளர் பி எம் நாகராஜன், ஆர் எஸ் எஸ் மாநில சேவை பிரிவு தலைவர் ராமராஜசேகர் உள்ளிட்டோர் வழங்கினார்கள்.
அழைப்பிதழை பெற்றுக் கொண்ட துர்கா ஸ்டாலின், விரைவில் தரிசனம் செய்ய வருவதாக கூறியுள்ளார்.
அயோத்தி ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் (மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்), மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன.
காங்கிரஸ் தனது அறிக்கையில், " அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை பாஜக- ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி" என விமர்சித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“