Advertisment

ரயில்களில் பயணிக்க இ- பாஸ் அவசியம்: விண்ணப்பிக்கும் முறை இங்கே!

இன்று முதல் இயங்கும் சிறப்பு ரயில்களில்  மண்டலங்களுக்கு இடையே ஒருவர் பயணித்தால் கட்டாம் இ-பாஸ் பெற வேண்டும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.   

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
corona virus, lockdown, tamil nadu, migrant workers, railway ministry, special trains, non a/c coaches, madurai, kovai, mayiladuthurai. nagercoil, katpadi, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil

தமிழகத்தில் ஐந்தவாது பொது முடக்கநிலை இன்று முதல் அமலாகிறது. அதன் அடிப்படையில், இன்று முதல் பொதுப் போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. இது குறித்து, வெளியான வழிகாட்டுதல்களில், போக்குவரத்து வசதிக்காக தமிழகம் 8 மண்டலமாக பிரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

Advertisment

முதல் கட்டமாக, மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை (மாநகரப் போக்குவரத்தில்  பயணித்தாலும்) என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், மண்டலங்களுக்கு இடையே தமிழக அரசின் பொதுப் போக்குவரத்து இயக்கப்படாது என்றும்,சொந்த வாகனங்களில்  செல்லும் பயணிகள் கட்டாயம் இ -பாஸ் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

 

இதனிடயே, தமிழகத்தில் இன்று முதல் கோவை -காட்பாடி, மதுரை- விழுப்புரம், திருச்சி- நாகர்கோவில், கோவை- காட்பாடி ஆகிய நான்கு வழித்தடங்கள் வழியே சிறப்பு ரயில்கள்  இன்று முதல் இயக்கப்படுகிறது.

எனவே,இந்த சிறப்பு ரயில்கள் மூலம் மண்டலங்களுக்கு இடையே ஒருவர் பயணித்தால் கட்டாம் இ- பாஸ் பெற வேண்டும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

உதாரணமாக, திருச்சி - நாகர்கோவில் வழித்தடங்கல் வழியே செல்லும் சிறப்பு ரயில் மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மதுரை VI-வது மண்டலம் , திருச்சி V-வது மண்டலமாகும்.

இ-பாஸ் அனுமதிச் சீட்டு பெறுவது எப்படி?

இ-பாஸ் பெற இந்த இணைய முகவரிக்கு செல்லவும்

விண்ணப்பதாரர் பயணம் செய்யும் தேதிகளை மட்டுமே குறிப்பிட

வேண்டும், தவறும் பட்சத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பதாரரும் பயணம் செய்கிறார் என்றால்,

விண்ணப்பதாரர் பெயரும் (Members Travelling) பயணம்

செய்வோரின் பட்டியலில் தெரிவிக்கப்பட தவண்டும்

தொடர்புடைய ஆவணங்களை இணைக்க வேண்டும், தவறும் பட்சத்தில்

விண்ணப்பம் நிராகரிக்கப்படும்

நமது விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டதும்,

விண்ணப்ப குறிப்பு எண்ணுடன் (SMS) குறுஞ்செய்தி மற்றும் (Email)

மின்னஞ்சல் அனுப்பப்படும் .

ePASS அங்கீகரிக்கப்பட்டதும் ePASS பதிவிறக்க

இணைப்புடன் மற்றொரு (SMS) குறுஞ்செய்தி அனுப்பிவைக்கப்படும்.

Coronavirus Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment