Advertisment

சென்னை அருகே அரசு நிலத்தில் கட்டிய வீடுகள்; மின் இணைப்பை துண்டித்து அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை அருகே சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் உரிய ஆவணமின்றி கட்டப்பட்ட வீடுகள், அரசு நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளுக்கு முறைகேடாக வழங்கப்பட்ட மின் இணைப்புகளை துண்டித்த மின்வாரிய அதிகாரிகள் மீட்டர்களை எடுத்துச் சென்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
EB Officials cuts EB connections in houses, houses built on government land in Singaperumal kovil, சிங்கபெருமாள் கோவில், சிங்கபெருமாள் கோவில் பகுதியில் அரசு நிலத்தில் கட்டிய வீடுகள்; மின் இணைப்பை துண்டித்து அதிகாரிகள் நடவடிக்கை, EB Officials cuts EB connections, government land in Singaperumal kovil

சிங்கபெருமாள் கோவில் பகுதியில் அரசு நிலத்தில் கட்டிய வீடுகள்; மின் இணைப்பை துண்டித்து அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை அருகே சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் உரிய ஆவணமின்றி கட்டப்பட்ட வீடுகள், அரசு நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளுக்கு முறைகேடாக வழங்கப்பட்ட மின் இணைப்புகளை துண்டித்த மின்வாரிய அதிகாரிகள் மீட்டர்களை எடுத்துச் சென்றனர்.

Advertisment

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில், ஆப்பூர் மலைக்கோயில் பகுதியில் உரிய ஆவணம் இன்றி அரசு நிலத்தில் கட்டப்பட்ட சுமார் 40 வீடுகளுக்கு முறைகேடாக வழங்கப்பட்ட மின் இணைப்புகளை துண்டித்து, மீட்டர்களை பறிமுதல் செய்து மின் வாரிய அதிகாரிகள் வியாழக்கிழமை நடவடிக்கை எடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு சிறிய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்று பகிர்மானக் கழகம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம், செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், மறைமலைநகர், திருமழிசை, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய மின் கோட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்கள், வீடுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கட்டங்களுக்கு மின் இணைப்பு வழங்கி வருகிறது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 17-ம் தேதி செங்கல்பட்டு சிறிய பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்று பகிர்மானக் கழகம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதில், செங்கல்பட்டு வடக்கு செயற்பொறியாளர் கட்டுப்பாட்டின் கீழ் வரும் சிங்கப் பெருமாள் கோவில் பகுதியில், அரசு நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளுக்கு முறைகேடாக மின் இணைப்பு வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், அங்கே ஏ.இ-யாக பணியாற்றிய அசோக்குமார், அப்பகுதியில் இருக்கக்கூடிய 250-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு ரூ.35,000 முதல் ரூ.60,000 வரை முறைகேடாக பணம் பெற்றுக்கொண்டு மின் இணைப்பு வழங்கி மின் மீட்டர்களைப் பொருத்தியது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து, சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் உரிய ஆவணமின்றி கட்டப்பட்ட வீடுகள், அரசு நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளுக்கு முறைகேடாக வழங்கப்பட்ட மின் இணைப்புகளை துண்டித்து மின்வாரிய அதிகாரிகள் மீட்டர்களை பறிமுதல் செய்தனர்.

குறிப்பாக, சிங்கபெருமாள் கோவில், ஆப்பூர் மலைக்கோயில் பகுதியில் உரிய ஆவணம் இன்றி அரசு நிலத்தில் கட்டப்பட்ட சுமார் 40 வீடுகளுக்கு முறைகேடாக வழங்கப்பட்ட மின் இணைப்புகளை துண்டித்த மின் வாரிய அதிகாரிகள் மீட்டர்களை பறிமுதல் செய்தனர். இதனால், அந்த வீடுகளில் வசிக்கும் மக்கள் மின்சாரம் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment