இனிமேல் இந்த விளம்பரத்தைப் பார்க்க முடியாதா???

தமிழக முதலமைச்சருக்குப் புகழாரம் சூட்டி திரையரங்குகளில் திரையிடப்பட்ட விளம்பரத்திற்குத் தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

சமீபத்தில் திரையரங்குகளில் திரையிடப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் பிரபலமான விளம்பரம் தான் “எடப்பாடி சாமி பேருக்கு அர்ச்சனை”. இந்த விளம்பரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு வழங்கு வேலை வாய்ப்பு குறித்து எடுக்கப்பட்டுள்ளது. அதில் மாற்றித்திறனாலி பெண் ஒருவர் கோவில் குருக்களிடம் ‘சாமி அர்ச்சனை என் பேருக்கு இல்ல சாமி பேருக்கு’ என்கிறார். அதற்கு அவர் ‘எந்த சாமிக்கு மா’ என்று கேட்டதுமே அப்பெண் ‘நம்ம தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அய்யாவுக்கு தான்’ என்கிறார்.

இந்த வசனங்கள் வந்த அந்த நொடியே தியேட்டர் அரங்கமே அதிரும் அளவுக்கு இளைஞர்கள் கூச்சலிட்டனர். இந்த விளம்பரத்தைக் கேலி செய்து மீம்ஸ், டப்ஸ்மேஷ் போன்ற பல பகிர்வுகள் வந்தன. இதுபோல் தமிழக அரசின் விளம்பரம் கேலி செய்யப்படுவது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதன் அடிப்படையில் இந்த விளம்பரத்தைத் திரையரங்குகளில் இருந்து உடனே நீக்குமாறு தமிழக அரசு உத்தரவு அளித்துள்ளது. இதனால் அனைத்துத் திரையரங்குகளிலும் இந்த விளம்பரம் ஒளிபரப்புவது நிறுத்தப்பட்டுள்ளது.

×Close
×Close