டிடிவி தினகரன் குறித்து பேசுவதற்கு அரி எம்.பி-க்கு எந்த தகுதியும் கிடையாது என டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
தேனியில், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் உள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளோம். அந்த ஆவணங்களில் அதிமுக-வின் பொதுச்செயலாளர் சசிகலா என்றும், துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என்றும் தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், அரி எம்.பி நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, டிடிவி தினகரன் கட்சியில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்யும்போது கைகெழுத்திட்டவர்களில் அரி எம்.பி-யும் தான் கையெழுத்திட்டார். ஆனால் தற்போது அவர் வேறு ஏதோ ஒரு காரணத்திற்காக இவ்வாறு பேசுகிறார்.
எடப்பாடி பழனிசாமி, அதிமுக-வின் பொதுச்செயலாளர் சசிகலா என்றும், துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என்றும் கூறினால் தான் சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் அடங்கும் என்று கூறினார்.