Advertisment

சமூக நீதி பேசி பட்டியலின மக்களுக்கு பெரும் துரோகம்: தி.மு.க.வை கண்டித்த எடப்பாடி பழனிசாமி

சமூக நீதி பேசி பட்டியலின மக்களுக்கு திமுக பெரும் துரோகம் இழைத்துள்ளது என முன்னாள் முதல் அமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
The Madras High Court has stayed the trial of Edappadi Palaniswami

முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தி.மு.க. சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ரூ.1000 மகளிர் உரிமைத் திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்துக்கு பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் திட்டத்தில் இருந்து நிதியை மாற்றியதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக ட்விட்டரில், “பட்டியல் இனத்தவர்களுக்கு வழங்கக்கூடிய

SCSP நிதியில் இருந்து 1560 கோடியை பொது மகளிர் மாதாந்திர திட்டத்திற்காக மாற்றி சமூக நீதிக்கு பெரும் பிழை இழைத்துள்ள இந்த விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.

மேடைகளிலும் படங்களிலும் மட்டும் போலி சமூகநீதி பேசி வரும் இந்த அரசு உண்மையில் பட்டியல் இன மக்களுக்கு இத்தகைய துரோகம்‌ இழைத்திருப்பது, இவர்களின் உண்மை முகத்தை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது.

பின்தங்கிய நிலையில் இருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் நிதியை வேற்று பணிகளுக்கு மாற்றுவது பெரும் அநீதி, இந்த அரசு உடனடியாக SCSP நிதியை உரிய துறையில் ஒப்படைக்க வேண்டும் என கண்டிப்புடன் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mk Stalin Eps Edappadi K Palaniswami Dmk Vs Aiadmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment