Advertisment

மாமன்னன் படம் பார்த்தீங்களா? எடப்பாடி பழனிசாமி பதில்

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல் அமைச்சருமான எடப்பாடி பழனிசாமியிடம் மாமன்னன் படம் பார்த்துவிட்டீர்களா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Edappadi Palaniswami said that 1 crore new members have been added to AIADMK

அதிமுகவில் 1 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல் அமைச்சருமான எடப்பாடி பழனிசாமியிடம் மாமன்னன் படம் பார்த்துவிட்டீர்களா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.

Advertisment

அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒரே எண்ணத்தோடு இருக்கின்றனர். என்னிடம் தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பதில் உண்மை இல்லை.

இதுவரை அதிமுகவில் 1 கோடியே 30 லட்சம் உறுப்பினர்கள் புதிதாக கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது ஜெயலலிதா இருந்தபோது 1.50 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.

இது இன்னும் சில நாள்களில் 1.50 கோடியை தாண்டிவிடும்” என்றார். தொடர்ந்து, “திமுகவின் பி டீம் ஆக ஓ.பி.எஸ் செயல்படுகிறார்” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள், மாமன்னன் படம் பார்த்தீங்களா? எனக் கேள்வியெழுப்பினார்கள். அதற்கு, “பார்க்கவில்லை” எனப் பதில் அளித்தார்.

மாமன்னன் உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்தப் படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ஒடிவருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Aiadmk Edappadi K Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment