Advertisment

மானம், ரோஷம், வெட்கம் இருந்தால் இந்த அரசு பதவி விலகவேண்டும் : ஸ்டாலின்

மானம், ரோஷம், வெட்கம் இருந்தால் இந்த அரசு பதவி விலகவேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
மானம், ரோஷம், வெட்கம் இருந்தால் இந்த அரசு பதவி விலகவேண்டும் : ஸ்டாலின்

மானம், ரோஷம், வெட்கம் இருந்தால் இந்த அரசு பதவி விலகவேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.

Advertisment

தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நேரத்தில், திமுக.வுக்கு ‘செக்’ வைக்கும் விதமாக அரசு தரப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஜூலை 19-ம் தேதி சட்டமன்றத்திற்கு தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களுடன் வந்ததாக கூறி ஸ்டாலின் உள்பட திமுக எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் மீது உரிமைக்குழு விசாரிக்கிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டமன்றக் குழுக்கள் கூடும் அறையில் ஆகஸ்ட் 28-ம் தேதி (திங்கட்கிழமை) இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் குழுவின் பரிந்துரை, அதை சட்டமன்றம் ஏற்பதை பொறுத்தே, ஸ்டாலின் உள்ளிட்ட 20 திமுக எம்.எல்.ஏ.க்கள் தப்புவார்களா? என்பது தெரியும். தமிழக சட்டமன்ற உரிமைக்குழுவில் மொத்தம் 17 பேர் இடம் பெற்றிருக்கிறார்கள். சட்டமன்ற துணை சபாநாயகரான பொள்ளாச்சி ஜெயராமன், இந்தக் குழுவின் தலைவராக இருக்கிறார். அவை முன்னவர் என்ற முறையில் செங்கோட்டையனும் இந்தக் குழுவில் இடம் பெற்றிருக்கிறார்கள். இவர்களை தவிர, ஆளும்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான ஓ.பன்னீர்செல்வம், மருதமுத்து, பரமேஸ்வரன், தங்கத்துரை, எஸ்.எஸ்.சரவணன், எம்.கீதா, டி.ஏ.ஏழுமலை, ராம ஜெயலிங்கம், ஜக்கையன் ஆகிய 7 எம்.எல்.ஏ.க்கள் அதில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

திமுக சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின், கே.எஸ்.ரவிச்சந்திரன், கே.சுந்தர், கே.ஆர்.பெரியகருப்பன், மதிவாணன், எஸ்.ரகுபதி ஆகிய 6 பேர் இதில் உறுப்பினர்கள். காங்கிரஸ் சார்பில் விஜயதரணி உறுப்பினராக இருக்கிறார். ஆக, இதில் ஆளும்கட்சியின் பலம் 10 ஆகவும், எதிர்கட்சிகளின் பலம் 7 ஆகவும் இருக்கிறது.

இதில் இப்போது பிரச்னையே, ஆளும்கட்சியின் 10 உறுப்பினர்களில் கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், நிலக்கோட்டை தங்கதுரை, பூந்தமல்லி ஏழுமலை ஆகியோர் டிடிவி.தினகரன் அணியில் இருக்கிறார்கள். சட்டமன்ற உரிமைக்குழு கூட்டத்தில் இவர்கள் பங்கேற்கவில்லை. மு.க.ஸ்டாலின் மீதான புகார் என்பதால், அவருக்கும் இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு இல்லை.

எனவேஆளும் கட்சியின் பலம் 7 ஆகவும், எதிர்க்கட்சிகளின் பலம் 6-ஆகவும் இருக்கிறது. எனவே இதில் மு.க.ஸ்டாலின் உள்பட 20 திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த காலகட்டத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் பட்சத்தில் ஆளும்கட்சி மெஜாரிட்டியை நிரூபிப்பது சுலபமாகிவிடும். ஆளும்கட்சியின் இந்த ‘மூவ்’ திமுக.வுக்கு ஷாக்!

இந்த நடவடிக்கை குறித்து ஆகஸ்ட் 28-ம் தேதி (திங்கட்கிழமை) இரவு 8.45 மணியளவில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது..

‘ஆட்சியை தக்க வைப்பதற்காக குறுக்கு வழியில், கொல்லைப்புறமாக இந்த முயற்சியை எடுக்கிறார்கள். ஜூலை 17-ம் தேதி குட்கா பற்றி நான் பேசிய பிறகு, பல இடங்களில் குட்காவை பறிமுதல் செய்திருக்கிறார்கள். இன்றும்கூட பொன்னேரியில் பறிமுதல் செய்துள்ளனர்.

இன்று சட்டமன்றத்தில் பேசியதற்காக எங்கள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கும் அரசு வெட்கம், மானம், ரோஷம் இருந்தால் அதற்காக பதவி விலக வேண்டும்.’ என்றார் ஸ்டாலின். ‘திமுக எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை குறைப்பதால், எப்படி ஆளும் கட்சிக்கு என்ன லாபம்?’ என அவரிடம் கேட்டபோது, ‘அவர்கள் அப்படி நினைப்பதால்தான் இதை செய்கிறார்கள்’ என ஸ்டாலின் கூறினார்.

Dmk M K Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment