பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் உயர்வு

பொறியியல் படிப்புகளுக்கான கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கட்டண நிர்ணயக்குழு அறிவித்துள்ளது. பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கட்டணம் கடந்த 2012-2013-ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது. அதன் பின்னர் தற்போது (2017-2018-ஆம் கல்வியாண்டு) உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, என்பிஏ அங்கீகாரம் கொண்ட படிப்புகளுக்கான கட்டணம் ரூ.45,000-ல் இருந்து ரூ.55,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. என்பிஏ அங்கீகாரம் இல்லாத படிப்புகளுக்கான கட்டணம் ரூ.40,000-ல் இருந்து ரூ.50,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் என்பிஏ அங்கீகாரம் இல்லாத படிப்புகளுக்கு கட்டணம் ரூ.75000-ல் இருந்து […]

Anna university

பொறியியல் படிப்புகளுக்கான கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கட்டண நிர்ணயக்குழு அறிவித்துள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கட்டணம் கடந்த 2012-2013-ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது. அதன் பின்னர் தற்போது (2017-2018-ஆம் கல்வியாண்டு) உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, என்பிஏ அங்கீகாரம் கொண்ட படிப்புகளுக்கான கட்டணம் ரூ.45,000-ல் இருந்து ரூ.55,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. என்பிஏ அங்கீகாரம் இல்லாத படிப்புகளுக்கான கட்டணம் ரூ.40,000-ல் இருந்து ரூ.50,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் என்பிஏ அங்கீகாரம் இல்லாத படிப்புகளுக்கு கட்டணம் ரூ.75000-ல் இருந்து ரூ.85000-ஆகவும், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு இடங்களில் என்பிஏ தரச்சான்று பெற்ற படிப்புளுகளுக்கு கட்டணம் ரூ.70,000ல் இருந்து ரூ.87,000-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Education fees hike for 2017 18 education year for engineering colleges

Next Story
”அமைச்சர் விஜயபாஸ்கர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்”: அன்புமணி விமர்சனம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express