ரஃபேல் புத்தகத்தை வைரலாக்கிய அதிகாரிகள்!

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்குப் பின்னர், இந்த புத்தகம் பி.டி.எஃப் வடிவில் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது. 

நேற்று ”நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்” என்ற புத்தகம் சென்னையில் வெளியிடப்பட இருந்தது.

புத்தக வெளியீட்டிற்கு சில மணி நேரங்கள் முன்னதாக தேர்தல் ஆணையத்தின் கடிதத்துடன் வந்த காவல்துறையினர், அச்சிடப்பட்டிருந்த புத்தகங்களை பறிமுதல் செய்தனர்.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்குப் பின்னர், இந்த புத்தகம் பி.டி.எஃப் வடிவில் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.

“ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையின் கீழ், 15 போலீஸ் அதிகாரிகள் பாரதி புத்தகாலயத்திற்கு வந்தனர். புத்தக வெளியீட்டை நிறுத்தும்படி கடிதம் ஒன்றை அளித்தனர். நாங்கள் 150 காப்பிகள் வைத்திருந்தோம். அத்தனையையும் பறிமுதல் செய்து எடுத்து சென்று விட்டார்கள். அவர்கள் தேர்தல் ஆணையத்திலிருந்து வருவதாக எங்களிடம் கூறினார்கள். ஆனால் புத்தகங்களை பறிமுதல் செய்ததற்கு அடையாளமாக, எந்தவொரு கடிதமும் வழங்கவில்லை” என்றார் பாரதி புத்தகாலயத்தின் நாகராஜன்.

இந்தியன் எக்ஸ்பிரஸிடம் இது குறித்துப் பேசிய சாகு, “இது குறித்து நான் ஒரு மண்டல அதிகாரியிடம் விசாரித்தேன். அப்போது அனுமதியின்றி சில புத்தகங்கள் விநியோகிக்கப்படுவது தெரியவந்ததாகக் கூறினார். அதனால் அவர்கள் எம்.சி.சி வழிகாட்டுதலின்படி இதை செய்திருக்கலாம்.

புத்தகங்களைப் பறிமுதல் செய்யச் சொல்லி, தேர்தல் ஆணையமோ, சி.இ.ஒ அலுவலகமோ எந்தவொரு வழிமுறையையும் வழங்கவில்லை. இதைப்பற்றி விசாரித்து அறிக்கை அளிக்கும்படி சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்” என்றார்.

விசாரணை அறிக்கைகளின் மொழிபெயர்பும் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதன் ஆசிரியர் எஸ்.விஜயன், 40-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதிய, சென்னையைச் சேர்ந்த ஐ.டி ஊழியர்.

இதனைப் பற்றி மேலும் தொடர்ந்த நாகராஜன், “கடந்த 15 வருடத்தில் 1500-க்கும் மேற்பட்ட புத்தகங்களை நாங்கள் வெளியிட்டிருக்கிறோம். ரஃபேல் ஊழல் புத்தகத்தை எழுதியவர், இதற்கு முன்பே நிறைய புத்தகங்களை எழுதியிருக்கிறார்” என்றார்.

முன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி சந்துரு, “தேர்தல் ஆணையம் பா.ஜ.க-வின் பி டீம் என்பதை மேலும் நிரூபித்திருக்கிறது. சட்டம் ஒழுங்கு துறை போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த புத்தகம் ஏற்கனவே வெளியான ஆங்கில மெட்டீரியல்களின் தொகுப்பு தான். ஆதரம் இல்லாமல் ரஃபேல் ஒப்பந்தத்தின் மீது குற்றம் சுமத்த முடியாது என உச்ச நீதிமன்றம் கூறிய பின்பும் இத்தகைய சம்பவம் நிகழ்ந்திருக்கிறது என்றால், பா.ஜ.க-வுக்குப் பின்னால் தமிழக ஆளும் கட்சி அடிமையாக இருக்கிறது எனத் தெளிவாகிறது.

இருப்பினும் இந்தப் புத்தகத்தை வைரலாக்க தேர்தல் ஆணையம் உதவியிருக்கிறது. இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்றால் 50, 100 பேர் தான் புத்தகத்தை வாங்கி படித்திருப்பார்கள்” என்றார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close