மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணனிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவையடுத்து தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. முதலமைச்சராக இருந்த ஓ பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, தான் முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டேன் என பகீர் பேட்டி அளித்தார் பன்னீர் செல்வம்.
இதையடுத்து, அதிமுக இரண்டு அணிகளாக பிளவுபட்டது. அப்போது, சசிகலா தரப்பினர் எம்எல்ஏ-க்களை கூவத்தூர் விடுதிக்கு கொண்டு சென்றனர்.விடுதியில் இருந்த எம்எல்ஏ-க்கள் சிலர் ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்து வெளிவந்தனர். அந்த சமயத்தில் மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் பேசியது தொடர்பான வீடியோ நேற்று வெளியானது. அதில், எம்எல்ஏ-க்களிடம் குதிரை பேரம் நடத்தப்பட்டது என்று அவர் அந்த வீடியோவில் கூறியதாக தெரிகிறது. ஆனால், அவ்வாறு நான் பேசவில்லை என சரவணன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சட்டமன்ற உறுப்பினர் சரவணனிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று கூறினார்.