சென்னையில் போக்குவரத்துத்துறை ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: போக்குவரத்து ஊழியர்களுக்கான நிலுவைத்தொகையில் இதுவரை ரூ.1,250 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை வரும் செப்டம்பர் மாதத்தில் வழங்கப்படும். இன்னும் ஓரிரு பேச்சுவார்த்தை மூலமாக 13-வது ஊதிய உயர்வு முழுமை பெறும் என்று கூறினார்.
மேலும், போக்குவரத்தில் தேவையில்லாத செலவுககளை குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. படுக்கை வசதியுடன் கூடிய பேருந்துகளை இயக்குவது குறித்து முடிவு செய்துள்ளோம். குறிப்பாக எலக்ட்ரிக் பேருந்து இயக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக மாதிரி பேருந்துகளை டாடா மற்றும் அசோக் லைலேண்ட் நிறுவனங்களிடம் பெற முயற்சி மேற்கொண்டுள்ளோம். முதற்கட்டமாக சென்னையில் விரைவில் எலக்ட்ரிக் பேருந்தின் சோதனை ஓட்டம் தொடங்கப்படும் என்று கூறினார்.