Advertisment

செந்தில் பாலாஜியின் சென்னை, கரூர் வீடுகளில் இ.டி சோதனை: மத்திய போலீஸ் பாதுகாப்புடன் அதிரடி

சென்னை, கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.மொத்தம் 12 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் சோதனை நடைபெற்று வருவதால் துணை ராணுவ படையினர் செந்தில் பாலாஜியின் வீட்டில் குவிக்கப்பட்டுள்ளனர்.

author-image
Vasuki Jayasree
New Update
செந்தில் பாலாஜி

Advertisment

சென்னை, கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.மொத்தம் 12 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் சோதனை நடைபெற்று வருவதால் துணை ராணுவ படையினர் செந்தில் பாலாஜியின் வீட்டில் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். சென்னை, கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக  அமைச்சர் செந்தில் பாலாஜியின் மீது  வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின்  அடிப்படியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 2011 முதல் 2016ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில், அவர் போக்குவரத்துத்துறை  அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக குற்றச்சாட்டு எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 10 நாட்களாக செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் மற்றும் உறவினர்,  நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவந்தனர். இந்நிலையில் வருமான வரி சோதனையின்போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் தற்போது அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜியின் வீடுகளில் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

மொத்தம் 12 இடங்களில் சோதனை நடைபெற்றது. கரூரில் 10 இடங்களிலும், சென்னையில் சில இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். கிரீன்வேஸ் சாலையில் உள்ள செந்தில் பாலாஜி வீடு மற்றும் சகோதரர் அசோக் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

செந்தில் பாலாஜி  காலையில் நடைபயிற்சில் இருந்தபோதுதான் அமலாக்கத்துறையினர் சோதனை நடைபெற்றது. “ நான் நண்பர்களுடன்  நடை பயிற்சியில் இருந்தேன். அப்போதுதான் சோதனை நடைபெறுவது தொடர்பாக தகவல் கிடைத்தது. உடனடியாக டாக்ஸியில் வீட்டுக்கு சென்றேன். அவர்கள் எதை தேடி இந்த சோதனையை நடத்துகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. அது வருமான வரித்துறையாக இருந்தாலும் சரி, அமலாக்கத்துறையாக இருந்தாலும் சரி முழு ஒத்துழைப்பை தருவேன்”  என்று அவர் கூறியுள்ளார்.

சோதனை நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிற்கு கூடுதலாக 10 துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணிக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். ஏற்கனவே வங்கி அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளும் நிலையில் கூடுதல் வீரர்கள் வந்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment