Advertisment

இஞ்ஜினியரிங் மாணவர் சேர்க்கை : ரேண்டம் எண் இன்று வெளியீடு

இஞ்ஜினியரிங் படிப்புகளில் சேர்வதற்காக கவுன்சிலிங்கிற்கான ரேண்டம் எண் இன்று ( ஜூன் 3ம் தேதி) வெளியிடப்படுகிறது.

author-image
kumaranbabu tk
புதுப்பிக்கப்பட்டது
New Update
engineering, admission, counseeling, random nmuber, online, application, இஞ்ஜினியரிங், மாணவர் சேர்க்கை, கவுன்சிலிங்,ரேண்டம் எண், ஆன்லைன், விண்ணப்பம்

engineering, admission, counseeling, random nmuber, online, application, இஞ்ஜினியரிங், மாணவர் சேர்க்கை, கவுன்சிலிங்,ரேண்டம் எண், ஆன்லைன், விண்ணப்பம்

இஞ்ஜினியரிங் படிப்புகளில் சேர்வதற்காக கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்தவர்களில் ஒரே மதிப்பெண் எடுத்தவர்களுக்குள் முன்னுரிமை அளிப்பதற்கான ரேண்டம் எண் இன்று ( ஜூன் 3ம் தேதி) வெளியிடப்படுகிறது.

Advertisment

தமிழகத்தில், இஞ்ஜினியரிங் படிப்புகளில் சேர்வதற்காக, மே 2ம் தேதி முதல் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். அந்தவகையில், மே 31ம் தேததி வரை, 1 லட்சத்து 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், ஒரே மதிப்பெண் பெற்றவர்களை வரிசைப்படுத்துவதற்கான ரேண்டம் எண், சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில் வெளியிடப்பட உள்ளது.

வரும் 6ம் தேதி முதல் 11ம் தேதி வரை, கவுன்சிலிங் உதவி மையங்களில் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற உள்ளது. இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையிலான ரேங்கிங் பட்டியல், 17ம் தேதி வெளியிடப்படுகிறது. அதனை தொடர்ந்து 20ம் தேதி சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும், ஜூலை 3ம் தேதி, ரேங்கிங் அடிப்படையிலான கவுன்சிலிங்கும் துவங்குகிறது.

ரேண்டம் எண் : இஞ்ஜினியரிங் கவுன்சிலிங்கில், ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் ஆப் மதிப்பெண் பெற்றிருந்தால் ரேண்டம் எண் முறை பின்பற்றப்படுகிறது. அதன்படி, கணிதத்தில் அதிக மதிப்பெண் பெற்றவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். அதிலும், ஒரே மாதிரி இருந்தால் இயற்பியலும், அடுத்தபடியாக வேதியியல் பாடமும் எடுத்துக்கொள்ளப்படும். 3 பாடங்களிலும் ஒரே மாதிரியான மதிப்பெண் இருந்தால் பிறந்த தேதியின் அடிப்படையில் வயது மூத்த மாணவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இவை அனைத்தும் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே மாதிரி இருக்கும் பட்சத்தில் ரேண்டம் எண் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.

How to check random number : இஞ்ஜினியரிங் படிப்புகளில் சேர்வதற்கான ரேண்டம் எண்கள் பெற https://tneaonline.in/ இணையதளத்தில் லாகின் செய்தபின், அடுத்த பக்கத்தில் யூசர் ஐடி, பிந்த தேதி உள்ளிட்ட விபரங்களை அளித்தால், உங்களுக்கான ரேண்டம் எண் கிடைக்கும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment