Advertisment

கேளிக்கை வரி ரத்து இல்லை; மாலை மீண்டும் பேச்சுவார்த்தை-அமைச்சர் தகவல்

கேளிக்கை வரி ஏற்கனவே உள்ளது. சினிமாத் துறையினருடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
கேளிக்கை வரி ரத்து இல்லை; மாலை மீண்டும் பேச்சுவார்த்தை-அமைச்சர் தகவல்

TN Live udpadtes- SP Velumani

கேளிக்கை வரி ஏற்கனவே உள்ளது எனவும், சினிமாத் துறையினருடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

Advertisment

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டம் ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் படி, அதிகபட்சமாக 28 சதவீதம் வரை வரி வசூலிக்கப்படுகிறது. அதன்படி, அதிகபட்ச வரியான 28 சதவீதம் திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சினிமா டிக்கெட்டுகளுக்கு 30 சதவீத கேளிக்கை வரி வசூலிக்கும் முறை ஏற்கனவே நடைமுறையில் இருப்பதால், திரையரங்கங்கள் 58 சதவீத வரி செலுத்த வேண்டியுள்ளது.

இந்த வரிவிதிப்பு முறைக்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த 3-ம் தேதி முதல் திரையரங்குகளை மூடி திரையரங்கு உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக தமிழக அரசுடன் நடைபெற்ற மூன்று கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன.

இந்நிலையில், சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வின் போது, ஜிஎஸ்டி வரியுயுடன் சேர்த்து கேளிக்கை வரி வசூலிப்பது திரையரங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரிவிதிப்பு குறித்து நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கவலை தெரிவித்துள்ளனர். சினிமா தொழில் நலிவடைந்து விடாமல் பாதுகாக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது. இத் துறையை நம்பி ஆயிரகணக்கானோர் உள்ளதால், மாநில அரசின் 30 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஜிஎஸ்டி, கேளிக்கை வரி ஆகியவற்றை இரட்டை வரியாக கருத முடியாது. கேளிக்கை வரி ஏற்கனவே உள்ளது. இந்த வரி உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்கும் முக்கிய வருமானம் ஆகும். முன்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இது குறித்து சினிமா துறையினரிடம் தெரிவித்தோம். இன்று மாலை சினிமா துறையினருடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதில், அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர் என்றார்.

முந்தைய செய்திகள்:

https://www.ietamil.com/tamilnadu/tamil-cinema-tax-problem-rajini-removes-silence/

https://www.ietamil.com/entertainment/kamalhasan-thank-to-rajinikanth-for-raising-voice-against-entertainment-tax/

Chennai Gst Tn Assembly Theatres Abirami Ramanathan Mk Stalin Sp Velumani Tamilnadu Assembly
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment