ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை சசிகலா முடிவு செய்வார்: டிடிவி தினகரன்

உறவினர் என்ற முறையிலேயே சசிகலாவை சந்தித்துப் பேசினேன் என டிடிவி தினரன் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த பின்னர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உறவினர் என்ற முறையிலேயே சசிகலாவை சந்தித்துப் பேசினேன். அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்த விவகாரத்தில் சசிகலா தான் முடிவு எடுப்பார்.

எதிர்க்கட்சிகள் ஆட்சியை கலைக்க முயற்சி செய்வது வழக்கமான நிகழ்வு தான். அதிமுக-வில் உள்ள அனைத்து எம்எல்ஏ-க்களும் எனது நண்பர்கள் என்று கூறினார்.

×Close
×Close