நாட்டில் காவிகளாக இருக்கலாம்... அது தான் ஆன்மீகம் : தமிழிசை

ஸ்டாலினும், ராகுலும் ஒன்றிணைந்து விமர்சனம் செய்தாலும் மத்திய அரசை ஒன்றும் செய்ய முடியாது என பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தமிழிசை பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியும், திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலினும் இணைந்து விமர்சனம் செய்தாலும், மத்திய அரசை ஒன்றும் செய்ய முடியாது.

இந்தி எதிர்ப்பு என்பதைக் காட்டியே ஒரு தலைமுறையை தவறாக வழிநடத்தினர். தவறான கருத்துகளை முன்வைத்து அவர்கள் என்னதான் கூடி குரல் கொடுத்தாலும், மத்திய அரசை அசைக்க முடியாது. கலைஞரின் வைரவிழாவின் போது பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்தது கண்டனத்திற்குரியது.

நாட்டில் பாவிகளாக இருப்பது தான் கூடாதே தவிர காவிகளாக இருக்கலாம். காவிகளாக இருப்பது ஒரு ஆன்மீகம் என்று கூறினார்.

×Close
×Close