பீனிக்ஸ் பறவையாக ஜெயலலிதா நினைவிடம் : சென்னை மெரினாவில் பிரம்மாண்ட திறப்பு

Jayalalitha Memorial Open : சென்னை மெரினா கடற்கரையில் பீனிக்ஸ் பறவை போன்று அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் இன்று திறக்கப்பட்டுள்ளது

Jayalalitha Memorial Open : ஆணாதிக்கத்திற்கு நடுவில், தனது  ஆளுமையாலும் தைரியமான முடிவுகளாலும் தமிழக அரசியலில் நீங்க முடியாத இடத்தை பிடித்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. தமிழக மக்களால் அம்மா என்று அழைக்கப்படும் இவர் மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற பரப்புரையின் மூலம் தொடர்ந்து 2-வது முறையாக முதல்வராக தேர்தந்தெடுக்கப்பட்டார்.  ஆனால் திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு அருகில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரது நினைவிடத்தில், மணிமண்டபம் அமைக்கப்படும் என்று ஆளும் அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை மெரினா கடற்கரையில், கடந்த 2018-ம் ஆண்டு ஜெயலலிதா நினைவிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. 80 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த நினைவிடம் பீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

9.09 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவிடம் இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்துடன் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தை சுற்றிலும் பூங்கா, புல்வெளிகள் மற்றும் தண்ணீர் தடாகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 15 மீட்டர் உயரம், 30 மீட்ட நீளம், 43 மீட்டர் அகலம் உள்ள இந்த நினைவிடத்திற்கான, இறகுகள் துபாயில் இருந்து வரவழைக்கப்பட்டது எனவும், மேடை அமைக்கப்பட்டுள்ளகிரானைட் கற்கள் ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்டது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த நினைவிடத்தை அலங்கரிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள செடிக்கள் ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நினைவிடத்தில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் மார்பளவு சிலை வைக்கப்பட்டுள்ள நிலையில், நினைவிடத்தின் மேற்கூரையில் சூரிய மின்சக்தி பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த நினைவிடத்திற்கு அருகில்,  12 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பூங்காவில் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாறு, அவரின் சாதனைகள், மக்களுக்காக அவர் செய்த நன்மைகள், மக்கள் சேவைகள்,  மக்களுக்கு அவர் கொடுத்த ஊக்க உரைகள், சிறுகதைகள், சிறுவயது முதல் அவரின் புகைப்படங்கள், மற்றும் பிரச்சாரத்தில் அவர் பேசிய வீடியோ மற்றும் போட்டோக்கள் என இந்த நினைவிடம் முழுவதும் டிஜிட்டல் உலகத்தால் நிரப்பப்பட்டுள்ளது.  மேலும் ஜெயலலிதா அடிக்கடி உச்சரிக்கும் மக்களால் நான் மக்களுக்காக நான் என்ற வாசகம் மேடையில் பொறிக்கப்பட்டுள்ளது.

மேலும் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் உள்ளது போல் அணையா விளக்கு வைக்கப்பட்டுள்ளது. அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கருணாநிதி ஆகிய 4 பேரின் நினைவிடமாக உள்ள சென்னை மெரினா கடற்கரையில் சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர். மேலும்  கலைநயத்துடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த நினைவிடத்தை பார்க்க தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநில்ஙகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அஇஅதிமுக தொண்டர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Farmer cm jayalalitha memorial open in chennai merina

Next Story
4 ஆண்டுகள் தண்டனை நிறைவு : மருத்துவமனையில் இருந்தபடி விடுதலையான சசிகலா
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express