Advertisment

காவிரி ஆற்றில் மணலில் புதைத்துக்கொண்டு விவசாயிகள் போராட்டம்; திருச்சியில் பரபரப்பு

திருச்சியில் 11-வது நாளாக இன்று காத்திருப்பு போராட்டம் நடத்திய விவசாயிகள் திடீரென்று காவிரி ஆற்றில் இறங்கி மணலில் தங்களை புதைத்துக்கொண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

author-image
WebDesk
New Update
Farmers protest by burying themselves in sand in Cauvery river, Trichy, Trichy news, காவிரி ஆற்றில் மணலில் புதைத்துக்கொண்டு விவசாயிகள் போராட்டம், அய்யாக்கண்ணு, Ayyakannu, திருச்சியில் பரபரப்பு, Farmers protest, Cauvery river in Trichy

காவிரி ஆற்றில் மணலில் புதைத்துக்கொண்டு விவசாயிகள் போராட்டம்

காவிரியில் மேகதாது அணைக்கட்ட கூடாது என்றும் காவிரியில் மாதா மாதம் தண்ணீர் திறக்க மத்திய அரசை வற்புறுத்த வேண்டும், விவசாயிகள் உரிமைக்காக ஜனநாயக நாட்டில், டெல்லி சென்று போராட முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அருகே தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment
publive-image

இந்நிலையில் 11-வது நாளான இன்று காத்திருப்பு போராட்டம் நடத்திய விவசாயிகள் திடீரென்று காவிரி ஆற்றில் உள்ளே இறங்கி மணலில் தங்களை புதைத்துக்கொண்டு போராட்டம் நடத்தியதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றிய தகவல் அறிந்து வந்த கோட்டை போலீசார் காவிரி ஆற்றில் உள்ளே இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அது தோல்வியில் முடிந்ததால், தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு காவிரி ஆற்றில் கயிறு கட்டி அவர்களை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

publive-image

பின்னர், காத்திருப்பு போராட்டத்திற்கு அனுமதி பெற்ற விவசாயிகள் திடீரென முன் அனுமதியின்றி காவிரி ஆற்றினுள் இறங்கிப் போராட்டம் நடத்தியதால், விவசாயிகள் அனைவரையும் கைது செய்த போலீஸார் அவர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

காவிரி ஆற்றில் உள்ள இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் இதை வேடிக்கை பார்த்த வாகன ஓட்டிகள் காவிரி பாலத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

முன்னதாக காவிரி ஆற்றில் போலீஸார் கைது நடவடிக்கையின்போது, செய்தியாளர்களை சந்தித்த அய்யாகண்ணு தெரிவித்ததாவது; காவேரியில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு போதுமான அளவிற்கு தண்ணீர் திறக்கவில்லை. விவசாயிகள் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வருகிறார்கள். இது தொடர்பாக தமிழக அரசு எந்தவிதமான ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. ஆகையால் இதை கண்டித்து காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டோம்.

தொடர்ந்து இன்று 11-வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் இதுவரை அரசு அதிகாரிகள் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. உடனடியாக அரசு அதிகாரிகள் எங்களுடைய கோரிக்கையை குறித்து விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லை என்றால் எங்களுடைய போராட்டம் நீங்கள் எதிர்பாக்காத அளவுக்கு தீவிரமடையும் என்றார்.

செய்தி: க. சண்முகவடிவேல்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Farmer Protest
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment