சேர்வலாறு அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வீணாக செல்வதை தடுக்க விவசயியாகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆற்று நீர், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயகளின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. இந்நிலையில், அம்மாவட்டத்தின் சேர்வலாறு அணையில் இருந்து தண்ணீர் வீணாக தாமிரபரணி ஆற்றில் செல்வதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
அணையின் ஷட்டர் பழுதை தற்போது பொதுபணித்துறை சரிசெய்து வருவதால் அணையில் இருந்து தண்ணீர் வீணாக செல்வதாக குறிப்பிட்ட பொதுமக்கள், பொதுபணித்துறையினர் பராமரிப்பு பணிகளை உரிய காலத்தில் மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் தண்ணீர் வீணாவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வரும் இத்தகைய சூழலில், சேர்வலாறு அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வீணாக செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.