அந்நிய செலாவணி மோசடி வழக்கு... சசிகலா மீது குற்றச்சாட்டு பதிவு!

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது சென்னை எழும்பூர் பொருளாதார நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 1996-97-ம் ஆண்டுகளில் ஜெ.ஜெ டிவிக்கு ஒளிபரப்பு சாதனங்கள் வாங்குவதில் அந்நிய செலாவணி சட்ட விதிகள் மீறப்பட்டதாக சசிகலா, திவாகரன், பாஸ்கரன் ஆகியோர் மீது ஏற்கெனவே அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை எழும்பூர் முதலாவது பொருளாதாராக் குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பெங்களூர் சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலமாக சசிகலா ஆஜரானார். பாஸ்கரன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். இதையடுத்து நீதிபதி சசிகலாவிடம் கேள்வி கேட்டார். ஆனால், அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டை சசிகலா மறுத்தார். 50 நிமிடங்கள் வரை வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் சசிகலா, பாஸ்கரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

×Close
×Close