மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆசிரியை கணவர் தீக்குளிப்பு!

மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி ஆசிரியையின் கணவர் தீக்குளிப்பு

மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி ஆசிரியையின் கணவர் தீக்குளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் காமராஜர் சாலையில் அமைந்துள்ள நிர்மலா பள்ளியில் கடந்த 15 ஆண்டுகளாக ஆசியையாக பணிபுரிந்து வருபவர் லியோ ஜெசிந்தா. இந்நிலையில், இவரது கணவர் ஜேசுராஜா என்பவர், இன்று மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு, தனது மனைவிக்கு பணி நிரந்தரம் செய்ய சாதி பாகுபாடு காட்டுவதாக புகார் அளித்தார். அப்போது திடீரென்று, வட்டாட்சியர் அலுவலகம் அமைந்துள்ள வளாகத்தின் வெளியே, பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

படுகாயம் அடைந்திருக்கும் ஜேசுராஜ், உடனடியாக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

More Details Awaited…

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close