scorecardresearch

பட்டாசு உற்பத்தியாளர்கள் காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு!

ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டாசு உற்பத்தியாளர்கள் ஜூன் 30-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். ஜிஎஸ்டி-யில் பட்டாசு உற்பத்திக்கு 28% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பட்டாசு உற்பத்தியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே, வரும் ஜூன் 30-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பட்டாசு உற்பத்தியார்கள் சங்க தலைவர் ஆசைத்தம்பி கூறும்போது: பட்டாசு உற்பத்திக்கு ஜி.எஸ்டி-யில் 28% […]

Fire workers
ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டாசு உற்பத்தியாளர்கள் ஜூன் 30-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

ஜிஎஸ்டி-யில் பட்டாசு உற்பத்திக்கு 28% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பட்டாசு உற்பத்தியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே, வரும் ஜூன் 30-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பட்டாசு உற்பத்தியார்கள் சங்க தலைவர் ஆசைத்தம்பி கூறும்போது: பட்டாசு உற்பத்திக்கு ஜி.எஸ்டி-யில் 28% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 8 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்டுவார்கள். எனவே, இதனை 15 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜூன் 30-ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கவுள்ளோம் என்று கூறினார்.

இந்த போராட்டத்தில் சிவகாசி மற்றும் அதைச்சுற்றியுள்ள 811 பட்டாசு உற்பத்தி ஆலைகள் பங்கேற்கின்றன.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Fire workers in tamilnadu oppose gst begin indefinite strike from june