இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் துப்பாக்கிகள் பறிமுதல்: கோவையில் கோவையில் பரபரப்பு

கோவையில் உள்ள இந்து முன்னணி தலைவர் ஒருவர் வீட்டில் 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Firearms confiscated from the house of a prominent Hindu leader
கோவை புலியகுளம் பகுதியில் உள்ள மசால் லே அவுட் பகுதியில் வசித்து வருபவர் அய்யோத்தி ரவி. இவர் இந்து முன்னணி அமைப்பில் பொறுப்பில் இருந்துள்ளார்.

கோவை புலியகுளம் பகுதியில் வசித்து வரும் இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் தனிப்படை போலீசார் சுமார் ஒன்றரை மணி நேரமாக சோதனை மேற்கொண்டதில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோவை புலியகுளம் பகுதியில் உள்ள மசால் லே அவுட் பகுதியில் வசித்து வருபவர் அய்யோத்தி ரவி. இவர் இந்து முன்னணி அமைப்பில் பொறுப்பில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் இவர் துப்பாக்கி வைத்திருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் உதவி ஆணையாளர் சதீஷ் தலைமையில் வந்த தனிப்படை போலீசார், ரவி வீட்டில் ஒன்றரை மணி நேரமாக தீவிர சோதனை மேற்கொண்டனர்.

மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த சோதனையில் தனிப்படை போலீசார் ரவி வீட்டில் இருந்து இரண்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் இந்த துப்பாக்கி பறிமுதல் தொடர்பாக அயோத்தி ரவியை ராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Firearms confiscated from the house of a prominent hindu leader

Exit mobile version