சென்னை திருவல்லிக்கேணியில் செயல்பட்டு வரும் பிலால் ஹோட்டலில் சாப்பிட்ட 20-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம், பேதி என உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, ஹோட்டலுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தற்காலிகமாக சீல் வைத்தனர்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பிலால் ஹோட்டலில் கடந்த மார்ச் 30-ம் தேதி இரவு உணவு சாப்பிட்டவர்களில் 20-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பிலால் ஹோட்டலில் சாப்பிட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பிலால் ஹோட்டலில் சோதனை நடத்த சென்றனர். ஆனால், அந்த ஹோட்டல் மூடப்பட்டிருந்ததால், அதிகாரிகள், ஹோட்ட உரிமையாளர்களை சொல்போனில் அழைத்தனர். ஆனால், அவர்கள் அந்த அழைப்பை எடுக்காததால், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த ஹோட்டலுக்கு தற்காலிகமாக சீல் வைத்தனர்.
மேலும், சென்னை அண்ணாசாலையில் உள்ள ஹோட்டலிலும் இதே போன்ற பிரச்னை எழுந்ததால், அந்த ஹோட்டலிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.