/tamil-ie/media/media_files/uploads/2023/05/screenshot76486-1683469766-1.jpg)
Former Tamil Nadu DGP joins RJD party
தமிழக டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கருணா சாகர், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் முன்னிலையில் பீகாரில் ஆளும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தார்.
1991 பேட்ச் தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியான கருணா சாகர், 32 ஆண்டுகள் தமிழ்நாடு காவல்துறையில் டிஜிபி உட்பட பல்வேறு பதவிகளிலும், பிரிவுகளிலும் பணியாற்றி இருக்கிறார்.
அதை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கீழ் வரும் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு இவருக்கு பாரத் கவுரவ் என்ற விருது வழங்கப்பட்டது.
இவர் கடந்த மார்ச் மாதம் தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். பீகாரின் ஜஹானாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த கருணா சாகர் உயர் சாதியான பூமிஹார் சமூகத்தைச் சேர்ந்தவர்.
கருணா சாகர் கட்சியில் இணைந்தது குறித்து தேஜஸ்வி யாதவ் கூறுகையில், கட்சிக்கு அறிவுஜீவிகள் தேவை என்றும், தமிழக முன்னாள் டிஜிபி இணைந்தது சாதகமான விஷயம்.
தமிழக முன்னாள் டி.ஜி.பி., இணைந்த பின், எங்கள் கட்சி வலுவடையும். அவரைப் போன்று இன்னும் சில அறிவுஜீவிகள் எங்கள் கட்சியில் சேர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தான் பிறந்த அந்த மாநில மக்களுக்காக உழைக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். அவர் இணைந்ததால், லாலுஜியின் கரம் வலுப்பெற்றது, என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.