அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதிவு!

உச்சநீதிமன்றம் 'அமைச்சர் என்றால் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா?' என்று கடுமையாக கேள்வி எழுப்பியது

உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது மன்னார்குடி காவல்நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

முன்னதாக, ‘உணவுத்துறை அமைச்சர் காமராஜ் என்னிடம் ரூ.30 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்துவிட்டார்’ என ரியல் எஸ்டேட் அதிபர் எஸ்விஎஸ் குமார் என்பவர் தொடர்ந்த வழக்கினை அடுத்து, தற்போது அமைச்சர் காமராஜ் மீது மன்னார்குடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இந்த மோசடி வழக்கு தொடர்பான விசாரணையின் போது, ‘அமைச்சர் என்றால் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா?’ என்று உச்சநீதிமன்றம் கடுமையாக கேள்வி எழுப்பியது. இதையடுத்து அமைச்சரின் மீது தற்போது தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

×Close
×Close