கேங்ஸ்டர் மோதலில் ரவுடி கொலை; இறுதி ஊர்வலத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

விழுப்புரம் அருகே வழுதாவூரில் கேங்ஸ்டர் மோதலில் கொலையான ரவுடியின் இறுதி ஊர்வலத்தில் அரசின் விதிமுறைகளை மீறி 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

gangster attack 2 rowdies murder, rowdy's funeral at Vazhudavoor in Villupuram, gangsters funeral more than 500 people participated, விழுப்புரம், வழுதாவூர் ரவுடி இறுதி ஊர்வலம், 500 பேர்களுக்கு மேல் பங்கேற்பு, violation of 144 curfew, coronavirus, covid-19, tamil nadu, latest tamil news
gangster attack 2 rowdies murder, rowdy's funeral at Vazhudavoor in Villupuram, gangsters funeral more than 500 people participated, விழுப்புரம், வழுதாவூர் ரவுடி இறுதி ஊர்வலம், 500 பேர்களுக்கு மேல் பங்கேற்பு, violation of 144 curfew, coronavirus, covid-19, tamil nadu, latest tamil news

விழுப்புரம் அருகே வழுதாவூரில் கேங்ஸ்டர் மோதலில் கொலையான ரவுடியின் இறுதி ஊர்வலத்தில் அரசின் விதிமுறைகளை மீறி 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இறுதி ஊர்வலம் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதால் அதில் பங்கேற்றவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், வழுதாவூரைச் சேர்ந்த முரளிதரன் மற்றும் கொடாத்தூரைச் சேர்ந்த அவரது நண்பர் சந்துருவுடன் அருண் என்பவரை கொலை செய்யும் நோக்கில் புதுச்சேரியில் உள்ள பிள்ளையார் குப்பம் பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், எப்படியோ அருண் இவர்களின் தாக்குதலில் இருந்து தப்பித்துள்ளார்.

ஆனால், முரளிதரனும் அவரது நண்பர்களும் பிள்ளையர்குப்பத்தில் அரிவாள்களுடன் சுற்றித் திரிந்து அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியதாக கூறப்படுகிறத். இதனிடையே, அருண் தனது கேங்ஸ்டர் சகாக்களுடன் திரும்பி வந்து முரளிதரனையும் அவரது நண்பரையும் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் மற்றவர்கள் தப்பித்துவிட முரளிதரனும் அவரது நண்பர் சந்துருவும் புதுச்சேரி பிள்ளையார்குப்பம் பகுதியில் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொலையான முரளிதரன், சந்துரு மீது பல வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடந்து, இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இறுதி சடங்குகளுக்காக சடலங்களை அவரவர் சொந்த ஊர்க்கு கொண்டு செல்லப்பட்டது. முரளிதனரனின் சடலம் அவரது சொந்த கிராமமான வழுதாவூருக்கு எடுத்துச் சென்றனர். விழுப்புரம் அருகே உள்ள வழுதாவூரில்  நடைபெற்ற முரளிதரனின் இறுதி ஊர்வலத்தில் 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

“50 பேர் வரை மட்டுமே இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியும் என்று அரசாங்க உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், 500க்கும் மேற்பட்டவர்கள் இறுதி ஊர்வலத்திலும் இறுதிச் சடங்கிலும் பங்கேற்றனர். இறுதி ஊர்வலத்திற்கு முன்பு கிட்டத்தட்ட 100 பேர் பைக்குகளில் சென்றனர். 200க்கும் மேற்பட்டோர் அவர்களைக் நடந்து சென்றனர் என்று இந்த சம்பவம் குறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த பெயர் தெரிவிக்க விரும்பாத ஒருவர் கூறினார்.

இறுதி ஊர்வலத்தின்போது, கண்டமங்கலத்தில் இருந்து காவல்துறையினர் அங்கே நிறுத்தப்பட்டிருந்தாலும், அவர்கள் கூட்டமாக சென்றவர்களை கேள்வி கேட்கவோ தடுக்கவோ இல்லை என்று வழுதாவூர் கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

வழுதாவூரில் 500 பேர்களுக்கு மேல் கலந்துகொண்ட ரவுடி முரளிதரனின் இறுதி ஊர்வலத்தின் வீடியோ சனிக்கிழமை முதல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஊரடங்கு உத்தரவு 144 பிரிவை மீறியதற்காக வழுதாவூரைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் செந்தில் உட்பட 100 பேர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் 2005, தொற்று நோய்கள் சட்டம், 1987 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக காண்டமங்கலம் போலீசார் தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கொரோனா பரவலைத் தடுக்க 144 பிரிவு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், விழுப்புரம் அருகே வழுதாவூரில் கொலையான முரளிதரனின் இறுதி ஊர்வலத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கூட்டமாக கலந்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Gangster attack rowdys funeral at vazhudavoor in villupuram more than 500 people participated

Next Story
அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதிpa valarmathi tested covid-19 positive, aiadmk former minister pa valarmathi, பா வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி, pa valarmathi affected by coronavirus, aiadmk, அதிமுக முன்னாள் அமைச்சர் பா வளர்மதி, coronavirus, covid-19
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com