Advertisment

தோழியுடன் இன்பநிதி போட்டோஸ் ரிலீஸ் செய்தது அண்ணாமலை டீமா? காயத்ரி புது புகார்

அண்ணாமலை டீம் உதயநிதி ஸ்டாலின் மகனின் புகைப்படத்தை கசியவிட்டு அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்ணையும் அவமானப்படுத்துகிறது – காயத்ரி ரகுராம்

author-image
WebDesk
New Update
Gayathri Rahuram

Annamalai and Gayathri Rahuram

இன்பநிதி தனது தோழியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டது அண்ணாமலை டீம் என பா.ஜ.க.,விலிருந்து விலகிய காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ளார்.

Advertisment

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி தனது தோழியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்: நேருக்கு நேர்… அண்ணாமலை என்னை எதிர்கொள்ளத் தயாரா? காயத்ரி ரகுராம் சவால்

இந்தநிலையில், இன்பநிதி புகைப்படங்களை வெளியிட்டது, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் டீம் என, அக்கட்சியிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காயத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில், தற்போது அண்ணாமலை டீம் உதயநிதி ஸ்டாலின் மகனின் புகைப்படத்தை கசியவிட்டு அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்ணையும் அவமானப்படுத்துகிறது. பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் அண்ணாமலை தலைமையில்? அடல்ட் வீடியோ ஆடியோ போட்டோ புகழ் அண்ணாமலை, எனப் பதிவிட்டுள்ளார்.

publive-image

மேலும், தனிப்பட்ட தாக்குதல் கேவலமானது. அண்ணாமலை அரசியல் ரீதியாக மோத வேண்டும் என்றும் காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Bjp Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment