தருமபுரி மாவட்டம், பென்னாகரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர் லஞ்சம் வாங்கியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது. தர்மபுரியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், தாலிக்கு தங்கம் திட்டத்தில் உதவிகள் பெறுவதற்கு ஆட்கள் தேர்வு செய்வதில் லஞ்சம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. பென்னாகரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இதற்காக ஒவ்வொருவரிடமும் தலா ரூ.500 லஞ்சமாக பெறப்பட்டதாக சமூக வலைகதளங்களில் வீடியோ வைரல் அடிக்கிறது.