வருமானத்தை மறைத்ததை ஒப்புக்கொண்ட 'கோல்டு வின்னர்' நிறுவனம்..!

ஆனால், காளீஸ்வரி நிறுவனம் சார்பில் இதுகுறித்து ஏதும் பதில் அறிக்கை வெளியிடப்படவில்லை...

பிரபல ‘கோல்டு வின்னர்’ எண்ணெய் நிறுவனமான காளீஸ்வரியின் 54 இடங்களில் கடந்த 4 நாட்களாக வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், அந்நிறுவனம் ரூ.90 கோடி அளவிற்கான வருமானத்தை மறைத்து அதற்கு வரி செலுத்தவில்லை என வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இதற்கான வரியை செலுத்த காளீஸ்வரி நிறுவனம் தற்போது ஒப்புக் கொண்டிருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால், காளீஸ்வரி நிறுவனம் சார்பில் இதுகுறித்து ஏதும் பதில் அறிக்கை வெளியிடப்படவில்லை.

இதையடுத்து, தற்போதுள்ள புதிய விதிமுறைகளின் படி, வருமானத்தை மறைத்து வரியை கட்டாததால், 107% வரி செலுத்த வேண்டும். இதனால், காளீஸ்வரி நிறுவனம் எத்தனை கோடி கட்ட வேண்டும் என அதிகாரிகள் தற்போது கணக்கிட்டு வருகின்றனர்.

×Close
×Close