Advertisment

புதுச்சேரி  அரசு. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு சார்பில் 169 இடங்கள் ஒதுக்கீடு

புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ படிப்புக்கு அரசு சார்பில் 169 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறையால் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மருத்துவக் கல்லூரி

மருத்துவக் கல்லூரி

புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ படிப்புக்கு அரசு சார்பில் 169 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என  சுகாதாரத்துறையால்  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

புதுச்சேரியில் முடிவு நிலை மருத்துவம் பல் மருத்துவம் இந்த படிப்புகளுக்கு அரசு தனியார் மருத்துவ கல்லூரிகளில் 169 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன இந்தியா முழுவதும் எம் டி எம் எஸ் போன்ற முதுநிலை படிப்புகளுக்கு நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களை கொண்டு நிரப்பப்படுகிறது

அதன்படி 2023, 24 கல்வி ஆண்டு மாணவர்கள்  சேர்க்கை காண தரவரிசை பட்டியலை நேற்று முன்தினம் புதுச்சேரி சுகாதாரத் துறையில் வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்களை சேர்க்கை நடத்தும் சென்ட் ஆப் இணையதளத்தில் முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்புக்கான அரசு நிர்வாக ஒதுக்கிட்டு இடங்களை நேற்று வெளியிடப்பட்டுள்ளது அதன்படி கல்லூரி வாரியாக முதுநிலை மருத்துவம் படிப்புக்கான இடங்களையும் சென்டாக் வெளியிட்டுள்ளது

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அரசு ஒதுக்கீடு இடங்கள் 11, அனைத்திந்திய ஒதுக்கீட்டு இடம் 10 வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரியில் அரசு ஒதுக்கீடு இடம் 54, நிர்வாக ஒதுக்கீடு 54, மணக்குள வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரியில் அரசு ஒதுக்கீடு 41 பீம்ஸ் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீடு 20 நிர்வாக ஒதுக்கீடு இடம் 20 என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மருத்துவம் சாராத முதுநிலை படிப்புக்கு டிப்ஸ் மருத்துவக் கல்லூரி அரசு 30 இடங்களையும் நிர்வாகம் சார்பில் 31 இடங்களையும் மணக்குள விநாயகர் கல்லூரியில் அரசு சார்பில் 53, நிர்வாகம் சார்பில் 53  வெங்கடேஸ்வரா கல்லூரியில் அரசு சார்பில் 65 கல்லூரி சார்பில் 65 இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் அகில இந்திய ஒதுக்கீடு 20 அரசு சார்பில் 21 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மொத்த அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு  ஒதுக்கீடாக மருத்துவம் மருத்துவம் சாராத படிப்புகளுக்கு 169 இடங்கள் நிர்வாக ஒதுக்கிடாக 147 இடங்கள் அரசு கல்லூரியில் அகில இந்திய ஒதுக்கிடாத 20 இடங்களும் அரசு ஒதுக்கீடாக 21 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

முதுநிலை பல் மருத்துவ படிப்பில் புதுச்சேரி அரசு மகாத்மா காந்தி சூழ்நிலை பல் மருத்துவ கல்லூரியில் ஒரு எட்டு அகில இந்திய ஒதுக்கீடு எட்டு வெளிநாடு வாழ் இந்திய ஒதுக்கிட்டு ஒன்று என மொத்தம் 17 இடங்களும் மாகி பல் மருத்துவக் கல்லூரியில் பொது ஏழு நிர்வாக ஒதுக்கீடு ஏழு என மொத்தம் 14 இடங்களும் புதுவை வெங்கடேஸ்வரா பல் மருத்துவ கல்லூரியில் பொது 7 நிர்வாக ஒதுக்கீடு ஏழு இடங்கள் என மொத்தம் 14 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர் இந்த தகவலை புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை சார்பு செயலாளர் கந்தன் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment