திண்டுக்கல்லில் பேருந்து விபத்து; 6 பேர் பலி....

அரசுப் பேருந்து ஓட்டுநர், லேசாக கண் அசந்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில், திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி சென்றுக் கொண்டிருந்த அரசுப் பேருந்து, அங்கே சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த சரக்கு லாரி மீது மோதிய விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளதாக தந்தி டிவி செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இந்த கோர விபத்தில் பதினைந்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாகவும், அவர்கள் அனைவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக, அரசுப் பேருந்து ஓட்டுநர், லேசாக கண் அசந்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக சக பயணிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

×Close
×Close