அரசு ஆசிரியை கொலை வழக்கு: கைதி தற்கொலை!

தனது கைலியைக் கொண்டு தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டுவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

கோவையில் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த நிவேதிதா, நேற்று முன்தினம் (8-ஆம் தேதி) சென்னை அண்ணா நகர் பகுதியில், கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து இளையராஜா என்ற தீயணைப்புப் படை வீரரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், சிறையில் இருந்த இளையராஜா இன்று சிறை வளாகத்தில் உள்ள கழிவறையில், தனது கைலியைக் கொண்டு தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டுவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

×Close
×Close