அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை... ஆளுநரின் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது: திருமாவளவன் - Governor Banwarilal Purohit hold meeting state official, it's shocking one, Thirumavalavan says | Indian Express Tamil

அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை… ஆளுநரின் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது: திருமாவளவன்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கோவையில் மேற்கொண்ட ஆய்வு அதிர்ச்சி அளிக்கிறது என திருமாவளவன் கருத்து

police security to thirumavalavan, life threat to thol thirumavalavan, தொல்.திருமாவளவன்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கோவையில் மேற்கொண்ட ஆய்வு அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கோவை மாவட்டத்தில் ஆய்வு பணிகள் மேற்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவது என்பது அரிதான நிகழ்வாகும். புதுச்சேரி மற்றும் டெல்லியில் அரசியல் விவகாரங்களில் ஆளுநர் தலையிடுவது என்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதற்கு அங்குள்ள ஆளும் கட்சிகள் உள்பட பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில், கோவையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளுடன், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறும்போது: தமிழத்தை பொறுத்தவரையில் மாவட்ட ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் தலையீடு என்பது இதுவரை இருந்ததில்லை. ஆளுநர் நடத்திய இந்த ஆய்வு நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.

தமிழகத்தின் கிரண் பேடியாகிறாரா ஆளுநர் பன்வாரிலால்? அரசு அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையால் சர்ச்சை!

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Governor banwarilal purohit hold meeting state official its shocking one thirumavalavan says