கரு மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டதால் சூரிய அஸ்தமன காட்சியை காண முடியவில்லை.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (மார்ச் ) கன்னியாகுமரி வருகிறார். இந்த நிலையில் அவரை வரவேற்கும் விதமாக ஆளுனர் ஆர்.என். ரவி குடும்பத்தினருடன் ஒருநாள் முன்னதாகவே கன்னியாகுமரி வந்துவிட்டார்.
Advertisment
அவரை மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். கன்னியாகுமரிக்கு குடும்பத்துடன் வந்துள்ள ஆளுனர் ஆர்.என். ரவி கோவளம் கடற்கரையில் சூரிய அஸ்தமன காட்சி பார்க்க சென்றார்.
கன்னியாகுமரியில் கவர்னர் ஆர்.என். ரவி மற்றும் அவரது குடும்பத்தினர்
ஆனால் கருமேகக் கூட்டங்கள் அடர்ந்து காணப்பட்டதால் அந்தக் காட்சி அவருக்கு கிடைக்கவில்லை. முன்னதாக ஆளுனர் அருகில் சென்று செய்தி சேகரிக்க புகைப்படங்கள் எடுக்க பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அங்கு சிறிய அளவிலான சலசலப்புகள் ஏற்பட்டன. தொடர்ந்து பத்திரிகையாளர்கள், ஊடகத்தினர் அனுமதிக்கப்பட்டனர்.
Advertisment
Advertisements
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/