scorecardresearch

15 வயது சிறுமியை பாலியல் தொழிலாளியாக அனுப்பிய கொடூரம் : சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவால் மீட்பு, அரசு டாக்டர் கைது

சென்னையை சேர்ந்த 15 வயது சிறுமியை கடந்த ஒரு மாதமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக, அரசு மருத்துவர் மற்றும் அவரது உதவியாளரை காவல் துறையினர் கைது செய்தனர்.

sexual harassment, sexual assault, POCSO act, child trafficking
sexual assault

சென்னையை சேர்ந்த 15 வயது சிறுமியை கடந்த ஒரு மாதமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக, அரசு மருத்துவர் மற்றும் அவரது உதவியாளரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சென்னை கோயம்பேட்டை சேர்ந்த 15 வயது சிறுமியின் தாய் சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் கடந்த 7-ஆம் தேதி புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில், “கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாக இருந்தார். இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் இறந்தார். எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். 15 வயதான மூத்த மகள் மட்டும் என்னுடன் உள்ளார். இளையமகள் வளசரவாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில், ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, மூத்த மகள் காணாமல் போய் விட்டாள். அவரை நான் பல இடங்களில் தேடினேன். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு எனது சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த குமார் என்பவர் என் மகளை என்னிடம் ஒப்படைத்தார்.

இந்நிலையில், எனது மகளின் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் அதுகுறித்து அவளிடம் விசாரித்தேன். அப்போது, ஆரணியை சேர்ந்த சித்ரா, கோட்டீஸ்வரி ஆகிய இருவரும் என் மகளிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி அங்குள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்துள்ளனர்.

மேலும், சித்ராவின் குடும்ப நண்பர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுரேஷ், அரசு மருத்துவர் ஜெயப்பிரகாசம், மருத்துவமனை ஊழியர் பாண்டியன் உள்ளிட்ட இன்னும் சிலர் என் மகளை ஒரு மாதமாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதனால், என் மகளின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. எனவே, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.”, என குறிப்பிடப்பட்டிருந்தது.

புகாரின் மீது நடவடிக்கை எடுக்க திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

இதையடுத்து மருத்துவர் ஜெயப்பிரகாசம், ஊழியர் பாண்டியன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து அவர்கள் மீது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம், பெண் குழந்தை கடத்தல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

சித்ரா மற்றும் அவரது ஆட்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மருத்துவர் ஜெயப்பிரகாசத்திடம் காவல் துறையினர் நடைபெற்ற விசாரணையில், சித்ரா, அந்த சிறுமியை பாலியல் தொழிலாளி என தம்மிடம் அறிமுகப்படுத்தியதாக தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Govt doctor detained for sexual abuse of 15 year old girl