Advertisment
Presenting Partner
Desktop GIF

விஷால் அலுவலகத்தில் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவு சோதனை என்ற தகவல் தவறானது

விஷாலின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, வடபழனி பேருந்து நிலையம் பின்புறம் அவருடைய அலுவலகம் அமைந்துள்ளது.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு புதிய சிறப்பு அதிகாரி - ஐகோர்ட்டில் அரசு பதில்

விஷால் அலுவலகத்தில் ஜி.எஸ்.டி. நுண்ணரிவு பிரிவுதுறையினர் சோதனை நடத்தியதாக வெளியான தகவல் தவறானது என சென்னை மண்டல ஜி.எஸ்.டி நுண்ணறிவு பிரிவு இணை இயக்குநர் ராஜசேகர் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

2004ஆம் ஆண்டு வெளியான ‘செல்லமே’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஷால். தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள விஷால், ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். அத்துடன், இசை வெளியீட்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

சினிமாவில் இருக்கும் குறைகளைச் சுட்டிக்காட்டும் விஷால், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு செயலாளராக வெற்றி பெற்றார். மேலும், கடந்த வருடம் நடைபெற்ற தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு தலைவராக வெற்றி பெற்றார். நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்கங்களில் சில மாற்றங்களை அவர் கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில், விஷாலின் அலுவலகத்தில் ஜி.எஸ்.டி. வரித்துறை வரித்துறையினர் தற்போது சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. சென்னை, வடபழனி பேருந்து நிலையம் பின்புறம் அவருடைய அலுவலகம் அமைந்துள்ளது.

முன்னதாக ஜி.எஸ்.டி நுண்ணரிவு பிரிவினர் சோதனை நடத்தியதாக தகவல்

மத்திய கலால் துறையின்கீழ் செயல்படும் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டடனர். அதிகாரிகள் நாகேந்திர குமார், ராஜசேகர் தலைமையில் சோதனை நடைபெற்றது. விஷாலின் தயாரிப்பு நிறுவனம் முறையாக ஜி.எஸ்.டி. செலுத்தியதா என்று சோதனை நடைபெறுவதாகத் தகவல் வெளியானது. மதியம் 2 மணிக்கு இந்த சோதனை தொடங்கியதாகத் தெரிகிறது. ஆனால், சம்பந்தப்பட்ட இடத்தில் விஷாலோ, அவருடைய மேனேஜரோ இல்லை. சென்னை, மீனம்பாக்கத்தில் உள்ள பின்னி மில்லில் ‘சண்டக்கோழி 2’ படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருப்பதால், அவர்கள் அங்கு இல்லை. ஆனாலும், அங்குள்ள ஊழியர்கள் ஜி.எஸ்.டி. வரித்துறை அதிகாரிகள் கேட்ட ஆவணங்களை எடுத்துக் கொடுத்துள்ளனர்.

‘மெர்சல்’ விவகாரம் குறித்து பாஜகவை, குறிப்பாக ஹெச்.ராஜாவை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார் விஷால். அதன் எதிரொலியாகவே இந்த சோதனை நடைபெறுவதாக அனைவரும் கருதுகின்றனர். கடந்த 6ஆம் தேதி தி.நகரில் உள்ள லைகா நிறுவனத்திலும் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவினர் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

விஷால் அலுவலத்தில் நடைபெறும் இந்த சோதனை அதிர்ச்சி அளிப்பதாக நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் தெரிவித்துள்ளார். விமர்சனங்களை முன்வைத்ததற்காக விஷால் மீது பழிவாங்கும் நடவடிக்கையா? எனவும் கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தகவல் தவறானது

GST raid, Vishal,

இந்த நிலையில், சென்னை மண்டல ஜி.எஸ்.டி நுண்ணறிவு பிரிவு இணை இயக்குநர் ராஜசேகர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். விஷால் அலுவலகத்தில் ஜி.எஸ்.டி சோதனை என வெளியான செய்திகளில் உண்மையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tamil Cinema Vishal Nadigar Sangam It Raid Gst
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment