Advertisment

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: விண்ணப்பத்தை நிராகரித்தால் ஆன்லைனில் மேல்முறையீடு; அரசு முக்கிய அறிவிப்பு

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அதனை எதிர்த்து விண்ணப்பதாரர் மேல் முறையீடு செய்ய விரும்பினால் 30 நாட்களுக்குள் இணைதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Guidelines for rs 1000 to family head woman, if applicatio canceled how to apply for rs 1000 to family head woman, TN govt important announcement, 1000 rs for ladies in tamil nadu eligibility, government 1000 rupees scheme apply online, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விண்ணப்பத்தை நிராகரித்தால் ஆன்லைனில் மேல்முறையீடு, அரசு முக்கிய அறிவிப்பு, who is eligible for 1000 rs scheme, 1000 rs for ladies in tamil nadu in tamil, tn govt 1000 rs scheme in tamil monthly 1000 for ladies, who eligible for 1000 rupees, tamil nadu government 1000 rupees scheme

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: விண்ணப்பத்தை நிராகரித்தால் ஆன்லைனில் மேல்முறையீடு; அரசு முக்கிய அறிவிப்பு

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அதனை எதிர்த்து விண்ணப்பதாரர் மேல் முறையீடு செய்ய விரும்பினால் 30 நாட்களுக்குள் இணைதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisment

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் குடும்பத் தலைவிகள் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கும் முகாம்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பப் பதிவு முகாம் நடத்துவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1,000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு, தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை நிர்வாக அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறும் பெண்கள், 21 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ரேசன் கடை பணியாளர், வீடுகளுக்கே சென்று விண்ணப்பப் படிவத்தை வழங்க வேண்டும் எனவும், விண்ணப்பப்பதிவின் போது கடவுச்சொல் (password) அனுப்பப்படும் என்பதால், தங்களது செல்போனையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பத்தை அளிக்கும் போது, ஆதார், குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், மின்சார கட்டண ரசீது ஆகியவற்றை அசலாக எடுத்துச் செல்ல வேண்டும் எனவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பப்பதிவு முகாம்களை காலை 9.30 மணி முதல் ஒரு மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் நடத்த வேண்டும் என்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் முகாம்கள் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஒருவர் விண்ணப்பித்த பின், மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அதனை எதிர்த்து விண்ணப்பதாரர் மேல் முறையீடு செய்ய விரும்பினால் 30 நாட்களுக்குள் இணைதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஒரு குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். சொந்த பயன்பாட்டுக்காக கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்போர் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாது என்று தெளிவுபடுத்தி அறிவுறுத்தியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment