குட்கா விவகாரம்: திட்டமிட்டு என் மீது அவதூறு கருத்துக்கள்: அமைச்சர் விஜயபாஸ்கர்

குட்கா விவாகரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பல கோடிகள், சென்னை மாநகரக் காவல் ஆணையருக்கு ரூ.60 லட்சம் உட்பட மொத்தம் ரூ.40 கோடி கையூட்டு வழங்கப்பட்டிருக்கிறது என்றும் இதை, வருமான வரித்துறை விசாரணையின்போது மாதவராவ் ஒப்புக்கொண்டிருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகின.

இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். சட்டமன்றத்தில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டு தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பும் செய்தனர்.
குறிப்பாக தி.மு.க செயல் தலைவர் மு.க ஸ்டாலின், அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில், குட்கா விவகாத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவதூறு பரப்படுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்போது: குட்கா விவகாரத்தில் திட்டமிட்டு என் மீது அவதூறு பரப்பப்படுகிறன. மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு மடியில் கனமும் இல்லை, வழியில் பயமும் இல்லை. குட்காவை தடை செய்யும் உத்தரவு 2013-ம் ஆண்டு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன் என்று கூறினார்.

×Close
×Close