குட்கா முறைகேடாக விற்பனை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க தேவையில்லை : தமிழக அரசு வழக்கறிஞர் வாதம்

தமிழகத்தில் குட்கா முறைகேடாக விற்பனை செய்த வழக்கில், அமைச்சர் விஜயபாஸ்கர், மூத்த காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் மீது புகார் செய்யப்பட்டதுள்ளது.

தமிழகத்தில் குட்கா முறைகேடாக விற்பனை செய்த வழக்கில், அமைச்சர் விஜயபாஸ்கர், மூத்த காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் மீது புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணை நேற்று மாலை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் விசாரணை நடத்தியது. அந்த வழக்கின் விசாரணை இன்று பகல் 12 மணிக்கு விசாரணைக்கு வந்தது. வழக்குத் தொடங்கியதும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தனது வாதத்தைத் தொடர்ந்தார். குட்கா வழக்கு தொடர்பான LIVE UPDATE :

அரசு தலைமை வழக்கறிஞர் : குட்கா வழக்கை சி பி ஐ க்கு மாற்ற விடுத்த கோரிக்கையை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏற்கனவே நிராகரித்துள்ளது… இதுகுறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளது… இந்த வழக்கை சி பி ஐ க்கு மாற்ற அவசியமில்லை…வருமான வரித்துறை கடிதத்தை வைத்து சி பி ஐ விசாரணை கோர முடியாது… அது வெறும் கடிதம் தான்… ஒரு வழக்கில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மத்திய அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருந்தால் மட்டுமே சி பி ஐ க்கு மாற்ற முடியும்… இந்த வழக்கை பொருத்தவரை மத்திய, மாநில அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர்.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி : விசாரணை நடந்து வரும் நிலையில் இன்றும் கடைகளில் குட்கா விற்கப்படுகிறதே.பல மாநிலங்களில் நடந்துள்ள குற்றம் என்பதால் லஞ்ச ஒழிப்புத்துறை இந்த வழக்கை விசாரிக்க முடியுமா?

அரசு தலைமை வழக்கறிஞர் : சட்டங்கள் இருந்தும் குற்றவாளிகள் செயலடுகின்றனர். கோகைன் போதைப்பொருள் தடை செய்யப்பட்டுள்ளது என்றாலும், தற்போதும் பல இடங்காலில் பரிமாற்றம் செய்யப்படும் போதும் பறிமுதல் செய்யபடுகிறது. கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள எடுத்துவந்தாலும், இன்னும் புழக்கத்தில்தான் உள்ளது. கருப்புப்பணத்தை ஒழிக்க தமிழக அரசும் நடவடிக்கை எடுத்துதான் வருகிறோம். சட்டவிரோத பணப்பரிமாற்றத்தை தடுக்கவும் முழுமையாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறோம். லஞ்ச ஒழிப்பு துறை இதுபோன்று மாநிலங்கள் கடந்த பல வழக்குகளை விசாரித்துள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close