scorecardresearch

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் வாசிப்பை கிண்டல் அடித்த பாஜக

நிதியமைச்சரின் இந்த தமிழ் தடுமாற்றத்தை பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா டிவிட்டரில் ‘சுக்குமி, லகுதி, ப்பிலி’ என பகடி செய்துள்ளார்.

Tamil Nadu Finance Minister PTR presented the budget
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழ் உச்சரிப்பை ஹெச் ராஜா கிண்டல் செய்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமர்பித்தார்.
பல்வேறு இணைய தளங்கள் வாயிலாகவும் நிதியமைச்சரின் உரை நேரலையாக ஒளிபரப்பாகியது.

சட்டப்பேரவையில் நிதி அமைச்சரின் தமிழ் வாசிப்பை பாஜகவினர் கிண்டலடித்து வருகின்றனர். வெளிநாட்டில் படித்து அங்கேயே பணிபுரிந்தவரான பழனிவேல் தியாகராஜன், தமிழில் சரளமாகவும், திடமாகவும் பேசக்கூடியவர்.
புள்ளி விவரங்கள் மற்றும் தரவுகளுடன் அவரது நறுக் பேச்சு இந்திய அளவில் பிரபலமானது. ஆனால் தமிழ் வாசிப்பில் சற்றுத் தடுமாறுகிறார். இதுவே கிண்டலுக்கு ஆளாகி வருகிறது.

ஹெச். ராஜா ட்வீட்
ஹெச். ராஜா ட்வீட்

நிதியமைச்சரின் இந்த தமிழ் தடுமாற்றத்தை பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா டிவிட்டரில் ‘சுக்குமி, லகுதி, ப்பிலி’ என பகடி செய்துள்ளார். இதையே இதர பாஜகவினர் ’சாப்பா டுபோ டப்ப டும்’ என்பது போன்ற வாக்கியங்களால் வழிமொழிந்து வருகின்றனர்.

இதன் ஊடாக நுழைந்த திமுகவினர் எச்.ராஜாவின் ‘சுக்கு மிலகு திப்பிலி’ என்பதை ‘ஐயா அது, சுக்கு மிளகு திப்பிலி. போய் ஒழுங்கா தமிழ் மொழியை படித்து வாங்க’ என்று பதிலுக்கு கிண்டலடித்து வருகின்றனர் திமுகவினர்.

செய்தியாளர் க. சண்முக வடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: H raja mocked tamil nadu finance minister palanivel thiagarajans tamil accent