By: kumaranbabu tk
Updated: December 30, 2019, 07:52:23 PM
hai guys, north east monsoon, chennai, chennai rain, 2019, new year 2020, local body election, sabarimala, makarajothi, love, kerala, old couple, marriage, வடகிழக்கு பருவமழை, சென்னை, சென்னையில் மழை, 2019, புத்தாண்டு 2020, உள்ளாட்சி தேர்தல், சபரிமலை, மகரஜோதி, காதல், கேரளா, திருமணம்
ஹாய் வணக்கம், வந்தனம், சுஸ்வாகதம் நமஸ்கார்…
இந்த வாரம் எப்படி போச்சுனு யோசிச்சா அது வீக் எண்ட்..
இந்த வருசம் எப்படி போச்சுனு போச்சுனு யோசிச்சா அது இயர் எண்ட்….
என்ற அரிய தகவலோட வாங்க, இன்னய நிகழ்ச்சிக்கு போவோம்..
2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்
2019 மட்டுமல்லாம, வடகிழக்கு பருவமழையும் நாளையோட முடியுதாம். 40 வருசத்துக்கு அப்புறமா, புயல் இல்லாத வடகிழக்கு பருவமழையா இது இருந்துருக்காம். இந்த வருசத்துல 102 சதவீதம் மழை பெஞ்சிருக்குறதா வானிலை மையம் சொல்லியிருக்கு…
வடகிழக்கு பருவமழை முடியுறனாலோ என்னவோ, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள்ல நேத்து மதியத்துனாத்துல இருந்து ஆங்காங்கே மழை பெஞ்சுகிட்டு இருக்கு போல…
இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் இப்போ நடந்துகிட்டு இருக்கு. சாயஞ்காலம் 5 மணி வரைக்கும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கு. யாருக்கு யாருக்கு வாக்கு இருக்கோ, தவறாம செலுத்திருங்க மக்காஸ்..
மகர ஜோதி நிகழ்விற்காக, சபரிமலை நடை இன்னைக்கு மறுபடியும் தொறந்துருக்காங்க. ஜன., 20 இரவு, 10:00 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்னு சொல்லியிருக்காங்க. ஜன., 21- காலை, 7:00 மணிக்கு நடை அடைச்சிருவோம்னு சபரிமலை தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கு..
புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக அதிக மக்கள் டில்லிக்கும், டில்லியில் இருந்து சென்னைக்கும் போயிட்டுருக்குறதனால, ஏர் இந்தியா, போயிங் 747-400 விமானங்களை இயக்கிகிட்டிருக்கு. 432 பயணிகள் பயணம் செய்ற வசதி கொண்ட இந்த விமானங்கள், டிசம்பர் 16,20,23,27 தேதிகள்ல இயக்கியதாவும், இன்னைக்கு 30ம் தேதியும் இயக்குறதாவும் சொல்லியிருக்காங்க.
புத்தாண்டு கொண்டாட்டங்கள்ல குடும்பத்தோட கலந்துக்க மதுரை தமிழ்நாடு ஹோட்டல் வாய்ப்பு செஞ்சு குடுத்திருக்கு. புத்தாண்டுன்னால குடியும், கொண்டாட்டமுமா தான் இருக்கும்னுங்குற நிலை மாறி குழந்தைகள் உற்சாகமாக விளையாடி மகிழவும், ஆண்கள் , பெண்கள் என குடும்பமாக மகிழ மதுரை தமிழ்நாடு ஹோட்டலில், மது இல்லாத புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செஞ்சுருக்காங்க.
2 பெரியவர்கள், 12 வயதிற்குட்பட்ட 2 குழந்தைகள் பேக்கேஜ்க்கு ரூ.3 ஆயிரம் மட்டுமே கட்டணம்.
கலந்துக்குறவங்க, டிக்கெட் பாஸ்க்கு இந்த 9842450963 நம்பரை தொடர்பு கொள்ளுங்க.
காதலுக்கு கண்ணில்லை என்பதை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம், ஏன் சில சமயங்கள்ல அந்த மாதிரி பார்த்து வயித்தெரிச்சலும் பட்டிருப்போம். காதலுக்கு வயதில்லை என்பது அரிதாக கேட்கப்படும் மற்றும் காணப்படுர்ற விசயம். அந்த அரிதான சம்பவம் இப்போ நடந்துருக்கு..
கேரளாவில் 67 வயதான கோச்சன்யான் மேனனுக்கும், 65 வயதான லட்சுமிக்கும் காதல் ஏற்பட, அவர்கள் நேற்று ( டிசம்பர் 29) கேரள பாரம்பரிய முறைப்படி திருமணம் செஞ்சுகிட்டு இருக்காங்க..
நிடூழி வாழ்க மணமக்களே… (ஏதோ நம்மளால முடிஞ்சது)
ok guys, மீண்டும் இன்னொரு நிகழ்ச்சியில மீட் பண்ணுவோம்..Bye..