Advertisment

Hai guys - ஜல்லிக்கட்டுல துள்ளிக்கிட்டு பாயுறாங்க நம்ம மதுர மக்காஸ்

Hai guys : ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கீங்க, பொங்கல் வச்சாச்சா, பொங்கல் விடுமுறைய சிறப்பா என்சாய் பண்ணிட்டு இருக்கீங்களா.....நல்லபடியா கொண்டாடுங்க

author-image
kumaranbabu tk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Hai guys, pongal, pongal 2020, pongal celebration, ilayaraja, kerala government, harivarasanam award, jallikattu, madurai, sabarimalai, makarajothi, military, modi, pongal wishes

Hai guys, pongal, pongal 2020, pongal celebration, ilayaraja, kerala government, harivarasanam award, jallikattu, madurai, sabarimalai, makarajothi, military, modi, pongal wishes, பொங்கல், பொங்கல் கொண்டாட்டம், ஜல்லிக்கட்டு, மதுரை, அவனியாபுரம், இளையராஜா, கேரள அரசு, ஹரிவராசனம் விருது, சபரிமலை, மகரஜோதி, இந்திய ராணுவம்

தமிழ் பேசும் நல்லுலகில் அனைத்து தமிழ் மக்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

Advertisment

ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கீங்க, பொங்கல் வச்சாச்சா, பொங்கல் விடுமுறைய சிறப்பா என்சாய் பண்ணிட்டு இருக்கீங்களா.....நல்லபடியா கொண்டாடுங்க

ரஜினி – கமலின் கலவையே தனுஷ் – தெறிக்கும் பட்டாஸ்...

வாங்க, நாம இன்னயோட நிகழ்ச்சிக்கு போவோம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு இன்று(ஜன.,15) அவனியாபுரத்தில் துவங்கி நடந்து வருகிறது.போட்டியில் பங்கேற்க 700 காளைகள் பதிவு செய்யப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டிருந்தன. 730 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்திருந்தனர். போட்டி துவங்குவதற்கு முன்னர், காளைகள், வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர். 3 சுற்றுகள் முடிவில், காளைகள் முட்டியதில் 15 வீரர்கள் காயமடைந்தனர்.

பாத்து விளையாடுங்க மக்காஸ்...

நம்ம இசைஞானி இளையராஜாவுக்கு கேரள அரசு ஹரிவராசனம் விருது வழங்கி கவுரவிச்சிருக்கு..சபரிமலை தேவசம் போர்டும், கேரள மாநில அரசும் இணைந்து ஆண்டுதோறும் சிறந்த இசைக்கலைஞர்களுக்கு ஹரிவராசனம் விருது வழங்கிட்டு வருது. சபரிமலையின் புகழை பரப்பும் கலைஞர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருது. இந்த விருதினை இதுக்கு முன்னால, கே.ஜே.யேசுதாஸ், கங்கை அமரன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்ரா, பி.சுசீலா ஆகியோருக்கு வழங்கப்பட்டிருக்கு

இசை சிகரத்தில் மேலும் மணிமகுடம்....

Hai guys : வெற்றிய தூரமா வச்சு ரசிக்கலாம் ; கிட்ட வச்சுக்கிட்டா டோட்டல் டேமேஜ் தான்...

Hai guys - நடிகர்களின் சம்பளம் இதைப்போலயாம்.... கமல் புது விளக்கம் குடுக்குறாருப்பு...

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், இன்று மாலை மகர விளக்கு விழாவையும், பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தரிசனத்தையும் காண, ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

சாமியே சரணம் ஐய்யப்பா...

நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜன., 15ம் தேதி இந்திய ராணுவ தினம் கடைபிடிக்கப்படுகிறது. ராணுவத்தில் 14 லட்சத்துக்கு மேற்பட்ட வீரர்கள் பணியாற்றுகின்றனர். இந்திய ராணுவம் பாகிஸ்தானுடன் நான்கு முறையும், சீனாவுடன் ஒருமுறையும் போரில் ஈடுபட்டுள்ளது. தவிர ஐ.நா., அமைதிப்படையில் பங்கேற்று பல்வேறு நாடுகளில் அமைதி பணிகளில் ஈடுபடுகிறது.

சல்யூட், நாட்டைக்காக்கும் நமது ராணுவ வீரர்களுக்கு மிகப்பெரிய சல்யூட்

ஓகே பிரெண்ட்ஸ், மீண்டும் மற்றொரு நிகழ்ச்சியில சந்திப்போம். Bye...

Pongal Ilayaraja Jallikattu Kerala Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment