வணக்கம் வந்தனம் சுஸ்வாகதம் நமஸ்கார்
ஹாய் பிரெண்ட்ஸ், மாட்டுப்பொங்கலை உற்சாகமாக கொண்டாடிட்டு இருக்கீங்களா, உங்க பகுதிகள்ல நடக்குற ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுகளை பார்த்து என்சாய் பண்ணுங்க..
ரஜினி – கமலின் கலவையே தனுஷ் – தெறிக்கும் பட்டாஸ்…
வாங்க, நாம இன்னயோட நிகழ்ச்சிக்கு போவோம்..
மதுரை மாவட்டம் பாலமேட்டுல ஜல்லிக்கட்டு நடந்துகிட்டு இருக்கு. 700 காளைகளும், 936 மாடுபிடி வீரர்களும் ஜல்லிக்கட்டில் பங்கேத்துகருக்காங்க. 2 எஸ்.பி.,க்கள், 4 ஏஎஸ்பிக்கள், 30 டிஎஸ்பிக்கள்,80 இன்ஸ்பெக்டர்கள் என 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்காங்க..
நம்ம மதுரை மானத்தை காப்பாத்துங்க காளையர்களே!!!
தஞ்சையில் சுற்றுலா துறை சார்பில் நடந்த பொங்கல் திருவிழாவில வெளிநாட்டு சுற்றுலா பயணியர் கலந்துகிட்டு மாட்டு வண்டியில் கிராமத்தை சுற்றிப் பார்த்தாங்க. தமிழர் பாரம்பரிய முறைப்படி, கிராம மக்கள் மாலை அணிவித்து, நெற்றியில் திலகமிட்டு உற்சாக வரேவற்பு அளிச்சாங்க. பின், அவர்கள் கிராம மக்களுடன் இணைந்து, பொங்கல் வைத்து கொண்டாடினாங்க. வழுக்கு மரம் ஏறுதல், கபடி, உறியடித்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை கண்டு ரசிச்சாங்க…
நம்ம பெருமைய அவங்க கரெக்டா தெரிஞ்சு வச்சிருக்காங்க..
Hai guys – ஜல்லிக்கட்டுல துள்ளிக்கிட்டு பாயுறாங்க நம்ம மதுர மக்காஸ்
Hai guys : வெற்றிய தூரமா வச்சு ரசிக்கலாம் ; கிட்ட வச்சுக்கிட்டா டோட்டல் டேமேஜ் தான்…
விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் இரண்டாவது லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கறுப்பு நிற உடையில் மாணவர்கள் பின்புறமாக நிற்க, நடுவில் அதே நிற உடையில் கூலிங் கிளாஸ் போட்டுகிட்டு உஷ்ஷ்..என சைகை செய்வது போன்று உள்ளது.
தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம்
ஓகே பிரெண்ட்ஸ், இன்னொரு நிகழ்ச்சியில் சந்திப்போம். Bye..
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Hai guys pongal mattupongal madurai jallikattu master vijay
Tamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்!
1 மாசம் ஆனாலும் கெட்டு போகாது… வாசனையான பூண்டு பருப்பு பொடி!
ஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன?
சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை
கடும் கட்டுப்பாடுகளுடன் 44-வது புத்தக கண்காட்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு