Advertisment

திருநெல்வேலி எஸ்.பி.யை கைது செய்து ஆஜர்படுத்த தடை.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

திருநெல்வேலி எஸ்.பி.யை கைது செய்து ஆஜர்படுத்த, மாநில பட்டியல், பழங்குடி ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

author-image
WebDesk
New Update
HC orders interim injunction to arrest Tirunelveli SP

சென்னை உயர் நீதிமன்றம்

திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபட்டி என்ற கிராமத்தை சேர்ந்த பட்டியல் இனத்தை சேர்ந்தவர், தன்னுடைய நிலம் அபகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பட்டியல், பழங்குடி இன ஆணையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.க்கு உத்தரவிடப்பட்டது.

Advertisment

இந்த நில ஆக்கிரமிப்பு புகாரில் அறிக்கை தாக்கல் செய்யாமல், ஆஜராகாமல் இருந்ததால் திருநெல்வேலி எஸ்.பி. சரவணனுக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

இது தொடர்பாக எஸ்.பி. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், “விசாரணை அறிக்கையை பரிசீலிக்காமலேயே கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், எஸ்.பி.க்கு பதிலாக கூடுதல் எஸ்பி ஆஜராக அனைத்து அதிகாரங்களையும் டிஜிபி வழங்கி உள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், “முதலில் மிரட்டும் வகையில் பத்திரிகை செய்தியை வெளியிட்டுவிட்டு, பின்னர் தான் வாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது” என்றும் எஸ்பி தரப்பு வாதாடியது.

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் திருநெல்வேலி எஸ்.பி.யை கைது செய்து ஆஜர்படுத்த, மாநில பட்டியல், பழங்குடி ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment