Advertisment

கொரோனா அதிகரிப்பு; ஊரடங்கு விதிக்கப்படாது - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

ஊரடங்கும் மற்றும் கூடுதல் கட்டுபாடு விதிக்க தேவையில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
Jul 05, 2022 09:59 IST
கொரோனா அதிகரிப்பு; ஊரடங்கு விதிக்கப்படாது - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

ஊரடங்கும் மற்றும் கூடுதல் கட்டுபாடு விதிக்க தேவையில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவுதல் கட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. கோவை மற்றும் செங்கல்பட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.  தற்போது பரவிவரும் கொரோனா எண்ணிக்கையை வைத்து புதிய கட்டுபாடுகளும், ஊரடங்கும் விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் ஊரடங்கு விதிக்கப்படாது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். 5% கொரோனா நோயாளிகள் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கிறார்கள். மத்திய அமைச்சகத்தின் அறிவிப்புபடி 40% மருத்துவமனை படுக்கைகள் கொரோனா நோயாளிகளால்  நிரப்பப்பட்டால் மட்டுமே, கட்டுபாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை. செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட இடங்களில் கொரோனா பரவலை  கட்டுபடுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.    

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment