தமிழ்நாட்டில் இன்றும் மழை பொழியும் என்றும் நவம்பர் 9ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலைக்கு வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை பல்வேறு இடங்களில் பெய்துவருகிறது. இந்த நிலையில் நவம்பர்9ஆம் தேதி வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
16 மாவட்டங்கள்
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, நாகை, கடலுர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திண்டுக்கல், திருவாரூர், தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
காரைக்கால் பகுதிகளில் ஓரிடு இடங்களில் கனமழையும் மற்ற இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறைந்த காற்றதழுத்த தாழ்வு பகுதியை தொடர்ந்து நவ.9ஆம் தேதி இடி மின்னலுடன் மழை பெய்யக் கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது.
இதற்கிடையில் நவ.9ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு ஏற்படவுள்ளதால் அன்றைய தினம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை வானிலை நிலவரம்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil