Advertisment

குமரியில் பெரும்மழை.. குளம் போன்று காட்சியளித்த கோவில் வளாகம்

தமிழ்நாட்டில் அடிக்கடி மழை பெய்யும் மாவட்டங்களில் ஒன்று குமரி.

author-image
WebDesk
New Update
குமரியில் பெரும்மழை.. குளம் போன்று காட்சியளித்த கோவில் வளாகம்

கனமழை காரணமாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய நீர்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையின் எதிரொலியாக கடந்த மூன்று நாள்கள் குமரி மாவட்டம் முழுவதும் பெருமழை பெய்துவருகிறது.

இந்தப் பெரும் மழையால்.தேசிய நெடுஞ்சாலை மட்டுமல்ல அனைத்து வாகன போக்குவரத்து நடக்கும் சாலைகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

Advertisment

இந்த நிலையில், குமரியின் முக்கிய தொழிலான மீன் பிடித்தலுக்கு, மூன்று நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என மீன்வளத்துறை தடை விதித்தது

இதனால் சின்ன முட்டம் மீன் பிடி துறைமுகத்தில் 300க்கும் அதிகமான இயந்திரப் படகுகள் கட்டப்பட்டிருந்தன.

நாகர்கோவிலில் பிரதான பகுதியான வடசேரி பெருத்து இருக்கும் பகுதியில் உள்ள சாலைகளில் பெரும் வெள்ளம் ஆறு போல் ஓடியது.

வடசேரி பேருந்து நிலையம் அருகில் உள்ள, வடசேரி காசி விஸ்வநாதர் ஆலையத்திற்குள் மழை நீர் புகுந்தது. கோவில் வளாகம் குளம் போன்று காட்சி அளித்தது.

நாகர்கோவிலில் கோட்டார் காவல் நிலையம் முதல். மீனாட்சி புரம் பகுதியில் உள்ள அவ்வை சண்முகம் சாலை மற்றும் நாகராஜா கோவிலுக்கு செல்லும் வழியும் வெள்ளக்காடாக காட்சியளித்தது.

இதற்கிடையில், பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்காததால், பள்ளி விட்டு சாலைகளில் நடந்து சென்ற மாணவ,மாணவிகள், பேருந்துகளில் செல்லும் மாணவ-மாணவிகளும் பாதிக்கப்பட்டார்கள்.

இதற்கிடையில், மாவட்டத்தில் குளச்சல், தக்கலை, சுசீந்திரம், ஆரல்வாய்மொழி, திருவட்டார்,மணவாளக்குறிச்சி, மற்றும் அணை பகுதிகளான பேச்சிப்பாறை,பெருஞ்சாணி, சிற்றாறு அணைப்பகுதிகளிலு கன மழையால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளிலும் வெள்ளம் புகுந்தது.

பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 570 கன அடி தண்ணீர் வந்தது, அணையிலிருந்து வினாடிக்கு 122 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வினாடிக்கு 536 கன அடி தண்ணீர் உபரி நீராக திறந்து விடப்படுகிறது.

குமரியின் குற்றாலம் என பெயர்பெற்ற திற்பரப்பு அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கடந்த 10 _நாட்களாக சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.

மழை பொழிந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் கன்னியாகுமரியில் சூரிய உதயம், அஸ்தனம் காண வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment